மேலும் அறிய

Eco-Friendly Diwali 2024: ஆனந்தமாக கொண்டாடுங்க! பாதுகாப்பான தீபாவளி.. சில டிப்ஸ்!

Eco-Friendly Diwali 2024: பாதுகாப்பான தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.

தீபாவளி வந்தாச்சு.. இந்த வார இறுதி பட்டாசு ஒலி, இனிப்பு, நண்பர்கள்,குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என நிரம்பியிருக்கும். வரும் 31-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி திருநாள்

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளி’(Diwali) முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்துக்கள் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் ஒளியின் பண்டிகை என்று பெரும்பாலானோர் கொண்டாடுகின்றனர். குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்தது மகிழ்ச்சியாக ஒரு நாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். நல்ல நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து மகிழ்வர். பட்டாசு, இனிப்பு கொண்டாட்ட கதைகள் என நிகழும். 

பாதுகாப்பான தீபாவளி

  •  பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணிவரையிலும் என்று 2 மணிநேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
  • சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.
  • பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. - இது அரசின் அறுவுறுத்தல்..

இது மட்டும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக வழி இல்லை. ஆரோக்கியம், நம் அன்பிற்குரியவர்களுடனும் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட வேண்டும்.

பட்டாசு வெடித்தால் செடி வளரும்

என்னது பட்டாசு வெடித்தால் செடி வளருமா என்று கேட்டால், ஆம். குறைந்த ரசாயனம் உள்ள பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று வெகு காலமாக சொல்லப்படுகிறது. இதுவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது. ஒலி மாசுவை குறைப்பதற்கு குறைந்த அளவிலாக பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம்.  அத்துடன், சந்தையில் பட்டாசு வெடித்தால் அதற்குள் சில காய்கறி, செடி விதைகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரகம் கிடைக்கிறது. கொண்டாட்டமும் பராம்பரிய முறையிலான கொண்டாட்டம் முக்கியம்தான். ஆனாலும், காலத்திற்கு ஏற்றவாறு சிலவற்றை தகவமைத்துக்கொள்வது சுற்றுச்சூழலுக்கு நன்மை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மண் விளக்குகளை கொண்டு விளக்கேற்றலாம். இல்லையெனில் எல்.ஒ.டொ. விளக்குகளை எரியவிடலாம்.

அன்பான பரிசு

குறைந்த அளவில் சர்க்கரை உள்ள இனிப்புகளை நண்பர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் பரிசாக அளிக்கலாம். செடிகள், காய்கறி, கீரை விதைகள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்கலாம். பிளாஸ்டிக் இல்லாத பரிசாக இருந்தால் நல்லது. 

கவனமுடன் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்கும்போது கவனமுடன் பட்டாசு வெடிக்கவும். பட்டாசு வெடிக்கும்போது கதர் ஆடைகள் அணிவது நல்லது. பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாலியில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது. குழந்தைகளை (12 வயது வரையிலான நபர்களை) தனியாக பட்டாசு வெடிக்க அனுப்ப வேண்டாம். அருகில் இருந்து கண்காணிக்கவும். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடவும் வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamal thank MK Stalin : ”நான் சொன்ன வார்த்தைக்காக.. கண்கலங்கிய முதல்வர்” நெகிழ்ச்சியில் கலங்கிய கமல்Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ipsSeeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
தமிழ்நாடு தினம்: தியாகங்களை நினைவு கூருவோம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு தினம்: தியாகங்களை நினைவு கூருவோம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Group 4: குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?  TNPSC தந்த முக்கிய அப்டேட் இதுதான்!
Group 4: குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? TNPSC தந்த முக்கிய அப்டேட் இதுதான்!
செயல்படாத தமிழக முதல்வர் ஹெல்ப்லைன் செயலி - மக்கள் அதிருப்தி; கண்டு கொள்ளுமா அரசு....!
செயல்படாத தமிழக முதல்வர் ஹெல்ப்லைன் செயலி - மக்கள் அதிருப்தி; கண்டு கொள்ளுமா அரசு....!
Thanjavur Glass Painting: அசைக்க முடியாத பெருமையை பெற்ற தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள்
அசைக்க முடியாத பெருமையை பெற்ற தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள்
Embed widget