மேலும் அறிய

Diwali 2024 Date:தீபாவளி எப்போ கொண்டாடப்படுகிறது? இந்த தீபாவளிக்கு என்ன முக்கியத்துவம்?

Diwali 2024 Date Tamil Nadu: தீபாவளி கொண்டாடப்படும் தேதி, நல்ல நேரம், முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை பற்றின் விரிவாக காணலாம்.

தீபாவளி வரப்போகுது. நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளியும்’ (Diwali) ஒன்று. தீபாவளி நாளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு, உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். தீபாவளி என்ற நன்மையான நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்யப்படுவதும் உண்டு. இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு பண்டிகைகள் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.  ஒவ்வொரு பண்டிகைக்கும் பல கதைகள் இருக்கும். 

தீபாவளி 2024 (Diwali 2024)

இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.  

பூஜை நேரம்:

அக்டோபர் 31-ம் தேதி வியாழன் கிழமையன்று நல்ல நேரத்தில் இறை வழிபாடு செய்வது நல்லது. ராகு காலம் தவிர்த்து அன்றய நாளில் பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது.
 பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை அகற்றலாம் என்பதும் நம்பப்படுகிறது. 

தீபாவளி பிறந்த கதை:

தீபாவளி பண்டிகை கொண்டாடத்திற்கு பல கதைகள் சொல்லப்படுவதுண்டு. வால்மீகி ராமயணத்தின் படி, ராமர் ராவணனை வென்ற நாளாகும். ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியாவிற்கு திரும்பிய நாள், 14 ஆண்டுகளுக்குப் பின் ராமர் வனவாசம் முடித்து சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய நாள் - அதை வரவேற்க அயோத்தி நகர் முழுவதும் தீபங்கள் ஏற்றி வரவேற்றனர். அதுவே தீபாவளி என்று சொல்லப்படுகிறது. 

தீமைகள் நீங்கி நம்மை பிறக்கும் நன்னாள் என்ற நம்பிக்கை இந்த பண்டிகைக்கு உண்டு. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து நிறைய கதைகள் இருக்கின்றன. ஒளி மயமான வாழ்க்கைக்கு செய்யும் வேண்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. 

நரகாசுரன் கதை:

இந்துப் புராணிகளில் உள்ள கதைப்படி, தீமையின் வடிவான அசுரர்களை கடவுள் அவதாரம் தரித்து அழித்து மக்களைக் காப்பாற்றியதால் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது

திருமால் வராக அவதாரம் எடுத்துபோது பூமாதேவிக்கு பிறந்தவர் நரகாசுரம். இவர் இயல்பிலேயே அசுரபாவம் கொண்டாவனாக இருந்ததாகவும் இன்னல்களை ஏற்படுவத்துவராக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பூமாதேவியின் மகன் இவரை அழிப்பது அவ்வளவு எளிதானது இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையறிந்த விஷ்ணு தந்திரமாக நரகாசுரனுடன் போர் செய்து பூமாதேவியுடன் சேர்த்து அவரை வீழ்த்தினார்.  நராகாசுரன் தான் மறைந்த நாளை மக்கள் மற்ற கூடாது என்பதற்காக அந்த நாளை இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவிடம் அவர் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. நரகாசுரன் இறந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. 

தீபாவளியன்று லட்சுமி வழிபாடு ஏன்?

மார்க்கண்டேய புராணத்தின்படி, பூமி இருளில் மூழ்கியிருந்தபோது வானத்தில் இருந்து பிரகாசமான ஒளி தென்பட்டது. தாமரை மீது அமர்ந்து லட்சுமி பூமியில் இருந்து அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. லட்சுமியின் ஒளி பூமி முழுவதும் பரவி வெளிச்சத்தை பரப்பியது என்று சொல்லப்படுகிவதுண்டு. லட்சுமி அவதரித்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

லட்சுமியை வரவேற்பதற்காக வீடுகளை சுத்தம் செய்து, விளக்கேற்றி கொண்டாடப்படுவதாக சொல்லப்பபடுகிறது.

தீபாவளி வழிபாடு:

தீபாவளி அன்று வீட்டில் இருக்கும் குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள் என அனைவருக்கும் எண்ணெய் குளியல்  செய்து, புத்தாடை உடுத்தி அதிகாலையில் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். வழிபாடு நடக்கும். பின்னர் உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் இனிப்புகளோடு அவர்களின் இல்லங்களுக்கு செல்வது என கோலாகலமாக கொண்டாடப்படும். மாலை பொழுதில் வான வேடிக்கைகள் பட்டாசுகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தில் திளைப்பார்கள். யார் வீட்டின் முன் அதிக வெடி வெடித்த குப்பைகள் இருக்கும் என்ற போட்டியும் நடக்கும். 

தீபாவளிக்கு மறுநாள் கௌரி நோன்பு கடைப்பிடக்கப்படும். வீட்டில் இருக்கும் பெண்களால் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம்,மண்ணால் தயார் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, காலையிலிருந்து உணவு ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பது வழக்கம். மாலையில் வில்வம்,அரச இலை என சிறப்பு பூஜை செய்து இறைவனை வழிபடுவர். விரத வழிபாடு பல்வேறு முறைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget