Diwali 2023: நன்மைகளை வரவேற்கும் நன்னாள் - எப்போது தீபாவளி? பிறந்த கதை; முக்கியத்துவம்!
Diwali 2023 Date Tamil Nadu: இந்தாண்டு தீபாவளி நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நவம்பர் பிறந்தாச்சு. நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளி’(Diwali) முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்துக்கள் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் ஒளியின் பண்டிகை என்று பெரும்பாலானோர் கொண்டாடுகின்றனர். குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்த்து மகிழ்ச்சியாக ஒரு நாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். நல்ல நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து மகிழ்வர். இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு பண்டிகைகள் நிறைந்தது. பெரும்பாலும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை இருக்கும்.
தீபாவளி 2023(Diwali 2023)
இந்தாண்டு தீபாவளி(Diwali 2023 Date) நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரத காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளி முடிந்தும் நவம்பர், 14, 15 -ம் தேதிகளில் கோவர்தன் பூஜை, பாய் டூஜ் உள்ளிட்டவைகளும் கொண்டாடப்படுகின்றன.
பூஜை
நவம்பர் 12-ம் தேதி ராகு காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இறைவனுக்கு பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது. விநாயகரையும், லக்ஷ்மியையும் பூஜித்து ஆசியை வேண்டுவது நலம். மோதக், அல்வா ஆகியனவற்றை செய்து படைப்பார்கள். பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை விரட்டாலம் என்றும் நம்பப்படுகிறது.
தீபாவளி பிறந்த கதை
தீபாவளி என்பது வால்மீகி ராமயணத்தின் படி, ராமர் ராவணனை வென்ற நாளாகும். மேலும் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் வனவாசம் முடித்து சீதாவுடன் அயோத்திக்கும் திரும்பிய நாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.
தீமைகள் நீங்கி நம்மை பிறக்கும் நன்னாள் என்ற நம்பிக்கை இந்த பண்டிகைக்கு உண்டு. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து நிறைய கதைகள் இருக்கின்றன. ஒளி மயமான வாழ்க்கைக்கு செய்யும் வேண்டுதல் என்றும் சொல்லப்படுகிறது.
இந்துப் புராணிகளில் உள்ள கதைப்படி, தீமையின் வடிவான அசுரர்களை கடவுள் அவதாரம் தரித்து அழித்து மக்களைக் காப்பாற்றியதால் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால் வராக அவதாரம் எடுத்துபோது பூமாதேவிக்கு பிறந்தவர் நரகாசுரன். இவன் இயல்பிலேயே அசுரபாவம் கொண்டாவனாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தான். பூமாதேவியின் மகன் என்பதால் அவதாரம் மூலம் மட்டுமே கொல்லப்பட முடியும். இதையறிந்த மகாவிஷ்ணு தந்திரமாக நரகாசுரனுடன் போர் செய்தார். நரகாசுரன் எய்த அம்பு மகாவிஷ்ணு பட்டு மயங்கினான். உடனே, சத்திய பாமா நரகாசுரனை வீழ்த்தினார். இறுதியில் பூமாதேவி தன் தாய் என அறிந்து வருந்திய நராகாசுரன் தான் மறைந்த நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று மக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுகொண்டான். அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழ் மாதங்களின் படி கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவு தீபாவளி கொண்டாடப்படுகிறது. மன்னர் காலங்களிலும் தீபாவளி கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் அப்போது ஒளிடை பெருக்கி தட்பவெட்ப நிலையை அதிகரிக்க இந்தப் பண்டிகையை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கலாம் என கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாரயணன் குறிப்பிடுக்கிறார்..
தீபாவளி வழிபாடு
தீபாவளி அன்று வீட்டில் இருக்கும் குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள் என அனைவருக்கும் எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை உடுத்தி அதிகாலையில் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். வழிபாடு நடக்கும். பின்னர் உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் இனிப்புகளோடு அவர்களின் இல்லங்களுக்கு செல்வது என கோலாகலமாக கொண்டாடப்படும். மாலை பொழுதில் வான வேடிக்கைகள் பட்டாசுகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தில் திளைப்பார்கள். யார் வீட்டின் முன் அதிக வெடி வெடித்த குப்பைகள் இருக்கும் என்ற போட்டியும் நடக்கும்.
தீபாவளிக்கு மறுநாள் கௌரி நோன்பு கடைப்பிடக்கப்படும். வீட்டில் இருக்கும் பெண்களால் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம்,மண்ணால் தயார் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, காலையிலிருந்து உணவு ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பது வழக்கம். மாலையில் வில்வம்,அரச இலை என சிறப்பு பூஜை செய்து இறைவனை வழிபடுவர். விரத வழிபாடு பல்வேறு முறைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.