தீபாவளிக்காக வந்த விருந்தினர்களுக்கு காஃபி , டீ வேண்டாம் ! புது பானங்களை செய்து அசத்துங்க!
அதன் பிறகு சோடாவை சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை சாற்றினையும் கலந்தால் சோடா காஃபி தயார்
விருந்தினர்களை வரவேற்க இந்தியர்கள் எப்போதுமே வழக்கமான டீ, காஃபி கொடுத்து உபசரிப்பது வழக்கம். குறிப்பாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நேரங்களில் அதிக அளவிலான விருந்தினர்கள் வீட்டிற்கு வருவார்கள் . அவர்களுக்கு வழக்கமான பானங்களை கொடுப்பதை விடுத்து சில புது மாதிரியான ட்ரிங்ஸை செய்து கொடுத்து அசத்துங்கள் .
புத்துணர்ச்சி பானம் :
இந்த புத்துணர்ச்சியூட்டும் பானத்திற்கு உங்களுக்கு தேவையானது வெள்ளரி, புதினா இலைகள், உப்பு, எலுமிச்சை , சாட் மசாலா மற்றும் ஐஸ் க்யூப்ஸ். வெள்ளரிக்காயை தோல் நீக்கி நறுக்கி, புதினா இலைகளுடன் சேர்க்கவும். இலைகள் மற்றும் விதைகளை வடிக்கட்டி. சிறிது உப்பு மற்றும் சாட் மசாலாவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அவ்வளவுதான் புத்துணர்ச்சி பானம் தயார். பரிமாரும் பொழுது சில ஐஸ்க்கட்டிகளை சேர்க்க மறக்காதீர்கள்.
காஃபி சோடா :
ஒரு கிளாஸ் / டம்ளர் / குவளையில் தேவையான அளவு காபி தூள் சேர்த்து, சிறிது வெந்நீர் சேர்க்கவும், அது முற்றிலும் கரைந்துவிடும். அதன் பிறகு சோடாவை சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை சாற்றினையும் கலந்தால் சோடா காஃபி தயார் . இதை ஐஸ் கட்டிகளுடன் குளிர வைத்து பரிமாறவும்.
View this post on Instagram
லிச்சி மாக்டைல் :
லிச்சி என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு பழம் . விதை நீக்கப்பட்ட லிச்சிஸ், இளநீர் மற்றும் அதன் தேங்காய் ஆகியவற்றுடன் சர்க்கரை மற்றும் ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள் . இதனுடன் ஒரு சில புதினா இலைகளை சேர்த்து விருந்தினர்களுக்கு கொடுத்து பாருங்கள் ! அசந்து போவார்கள்
View this post on Instagram
செர்ரி இஞ்சி ஐஸ் டீ :
செர்ரி மற்றும் இஞ்சி ஆகியவற்றின் கலவையானது வித்தியாசமாகத் தோன்றினாலும், இந்த பானம் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்டது. உங்களுக்கு தேவையானது டீ சேர்த்து வடிக்கட்டப்பட்ட நீர், செர்ரி, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு மட்டுமே. திராட்சை சாறும் சேர்க்கலாம்.ஒன்றாக கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து ஐஸ் க்யூப்ஸையும் சேர்த்து பரிமாருங்கள்