‛ரெம்டெசிவர் நோயை குணமாக்காது; தீவிரத்தை தடுக்கும்’ -பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் முகமது ஹக்கீம்
முதல் அலையில் பேசப்படாத ரெம்டெசிவர் மருந்து இரண்டாம் அலையில் அதிக அளவில் பேசப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் மக்களிடையே அதிகரித்துள்ள அச்சமே. அதுமட்டுமின்றி மக்கள் தங்களுடைய சுய சோதனையாக இணையதளத்தில் பார்ப்பதையும் தங்களுக்கு உண்டாகும் அறிகுறிகளை வைத்து கூகுள் போன்றவற்றில் தேடும்பொழுது ரெம்டெசிவர் போன்றவற்றை உயிர்காக்கும் மருந்து என்று நம்புகின்றனர்.
கொரனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது, இதனால்அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை படுக்கை வசதி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கிடையில் கொரானா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டஸ்வீர் மருந்து அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே தரப்படுகிறது. அதனை வாங்குவதற்கு மக்கள் முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் நிற்கும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.
ரெம்டஸ்வீர் மருந்து யாரெல்லாம் பயன்படுத்தலாம்? இது நோயை கட்டுப்படுத்துமா? என்ற பல கேள்விகள் மக்களிடையே இருக்கும் பட்சத்தில் திருச்சி அவசர சிகிச்சை டாக்டர் முகமது ஹக்கீம் ரெம்டெவிசர் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
*கொரானா பாதித்தவர்கள் அனைவருக்கும் வென்டிலேட்டர் உதவியோ ரெம்டெசிவர் மருந்தோ தேவைப்படுவதில்லை. கொரானா பாதித்தவர்கள் 10 சதவீத மக்களுக்கு மட்டுமே "தீவிர பாதிப்பு" ஏற்படுகிறது. கொரானா பாதிப்பு தொடக்கநிலை, நடுநிலை, அபாய கட்டம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
இதில் நடுநிலையிலிருந்து அபாய கட்டத்திற்கு செல்லாமல் இருக்க ரெம்வெசிவர் பயன்படுத்தலாம். அதிக அளவில் பேசப்பட்டு வரும் ரெம்டெசிவர் மருந்து ஆன்டி-வைரல் பிரிவை சேர்ந்தது.
*இது உயிர் காக்கும் மருந்து அல்ல என சாலிடாரிட்டி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடக்கநிலை நோயாளிகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும்போது ஸ்டீராய்டு ஹெப்பரின் மருந்துகள் மட்டுமே தரப்படுகின்றன.
*நோயின் தீவிரத்தை குறைக்கவே ரெம்டெசிவர் மருந்து பயன்படுகிறது தவிர இது உயிர் காக்கும் மருந்தல்ல, எனவே கிடைத்தால் நோயாளிகளுக்கு மருந்து பயன்படுத்தலாம் இல்லாவிட்டால் அதற்கான வரிசையில் நின்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
*உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக் கொள்ளும்; இந்த செயலினால் நுரையீரலில் ஏற்படும் அழற்சி நுரையீரலின் மெல்லிய திசுக்களை காயம் அடைய செய்து அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் கற்றில் உள்ள உயிர்வளியை நுறையிரலினால் பிரித்து உடலுக்குள் செலுத்த இயலாது. இந்த சுவாசப் பிரச்சனையினால் நோயாளி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
*பொதுவாக தொற்று ஏற்பட்டு மூன்று அல்லது நான்காவது நாளிலிருந்து தான் அதற்கான அறிகுறி நோயாளிகளுக்கு தெரிய வரும்.இருமல், சளி,உடல்வலி காய்ச்சல், சுவை மணம், இல்லாதது போன்ற பிரச்சனைகளுக்கு பிறகு சுவாசப் பிரச்சனை ஏற்படும்.
*இந்த சூழ்நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவாக இருந்தாலும் சிடி ஸ்கேன் நுரையீரலில் உள்ள கொரானா பாதிப்பை துல்லியமாக பார்க்க முடியும். இந்த பாதிப்பு 7 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நோய் தீவிர தன்மையை அடைந்து வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
*முதல் அலையில் பேசப்படாத ரெம்டெசிவர் மருந்து இரண்டாம் அலையில் அதிக அளவில் பேசப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் மக்களிடையே அதிகரித்துள்ள அச்சமே. அதுமட்டுமின்றி மக்கள் தங்களுடைய சுய சோதனையாக இணையதளத்தில் பார்ப்பதையும் தங்களுக்கு உண்டாகும் அறிகுறிகளை வைத்து கூகுள் போன்றவற்றில் தேடும்பொழுது ரெம்டெசிவர் போன்றவற்றை உயிர்காக்கும் மருந்து என்று நம்புகின்றனர். இவை மக்களின் அறியாமையையும் மற்றும் நோயின் மீதான பயத்தை குறிக்கிறது .
*ரெம்டெசிவர் நோயை குணமாக்கும் என்பதைவிட, நோய் மேலும் தீவிரம் தன்மை அடையாமல் தடுக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகின்றது. கொரானா பாதிப்பு இருக்கும் அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அத்தியாவசியம் அல்ல.
*இந்த மருந்துடன் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டி பையோடிக் மருந்து சேர்த்து ஆரம்ப கட்டத்தில் சேர்த்து அளிக்கும்போது மக்கள் எளிதில் குணமடைகின்றனர்.
*ரெம்டெசிவர் மருந்து மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு கிடையாது என்பதனை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேபி புளூ (ஃபவிபிரவிர்) என்னும் மாத்திரைகள் தொடக்கநிலை கொரானா பாதிப்புக்கு தரப்படுகிறது.
*கொரோனா நோய்த்தொற்று வந்தவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி மட்டுமே மருந்தை பயன்படுத்த வேண்டும். இந்த மருந்துக்கு உயிர்காக்கும் தன்மை கிடையாது என்பதை புரிந்து கொள்ளாத மக்கள், எந்த விலை கொடுத்தாவது வாங்க முயற்சிப்பதின் விளைவு இம்மருந்தை வைத்து கள்ள மார்க்கெட் வியாபாரம் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
*தேவையான நோயாளி களுக்கு மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வாங்கும் நிலை ஏற்பட்டால் மருத்துவமனைகளில் தேவையற்ற நெரிசல் குறையும்.
*ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தல்ல என்பதனை ஆராய்ச்சியளர்கள் கூறியுள்ளனர். அரசு மருந்து பயன்பாடு குறித்த முறையான அறிவிப்பையும் வெளியிட வேண்டும். மக்கள் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளையும் அரசு கூறும் அறிக்கைகளிலும் இது போன்ற குளறுபடிகள் மக்களிடம் ஏற்படாமல் இருக்கும், என்கிறார்.
ரெம்டெசிவர் மருந்தை ஒரு நிரந்தர தீர்வாக மக்கள் கருதுதல் கூடாது. சமூக இடைவேளை, முக கவசம், சுகாதாரம் போன்றவை நம் உயிரை பாதுகாக்கும்.