மேலும் அறிய

Cycling: காலையில் சைக்கிளிங் பயிற்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இதையெல்லாம் அனுபவிங்க மக்களே!

சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் ஒரு வசதியான வடிவமாகும்.  நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும்.

நம் தினசரி வாழ்வில் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் ஜாலியாக மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்றுதான் சைக்கிளிங் பயிற்சி. வீட்டுக்குள்ளேயே இருந்தபடி நிலையான சைக்கிள் பயிற்சி அல்லது வெளியே சைக்கிள் ஓட்டிச் சென்று காலைக்காற்றை சுவாசித்தபடி பயிற்சி என நமக்கு பிடித்தபடி சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ளலாம்.

உடலில் குறைவான தாக்கத்தை உண்டு பண்ணும் ஏரோபிக் பயிற்சியாக இந்த சைக்கிளிங் பயிற்சி பார்க்கப்படுகிறது. உடல்ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் இந்த சைக்கிளிங் பயிற்சியின் நன்மைகளைப் பார்க்கலாம்

உடல் எடை குறைப்பு

தினசரி சைக்கிள் ஓட்டுவது  உடல் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுவதுடன், எடை மேலாண்மையையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் எடைக் குறைப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளீர்கள் என்றால் சைக்கிள் ஓட்டுதலுடன் ஆரோக்கியமான உணவுத் திட்டமிடலையும் பின்பற்ற வேண்டும்.

சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் ஒரு வசதியான வடிவமாகும்.  நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும்.

சைக்கிளிங் பயிற்சிகளின் மூலம் வாரத்திற்கு குறைந்தது 8,400 கிலோஜூல்கள் (சுமார் 2,000 கலோரிகள்) எரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வீட்டுக்குள்ளேயே மேற்கொள்ளப்படும் நிலையான சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1,200 கிலோஜூல்களை (சுமார் 300 கலோரிகள்) எரிக்கிறது.

ஒவ்வொரு நாளும் அரை மணி நேர சைக்கிள் பயிற்சி ஓராண்டில் கிட்டத்தட்ட ஐந்து கிலோகிராம் கொழுப்பை எரிக்கும் என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

கால்கள் உறுதியாகும்

சைக்கிள் ஓட்டுதல் உங்கள் கீழ் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துகிறது.  மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் கால் தசைகளை பலப்படுத்துகிறது. 

உங்கள் கால்களை இன்னும் பலப்படுத்தவும், உங்கள் சைக்கிள் ஓட்டுதல் செயல்திறனை அதிகரிக்கவும், வாரத்திற்கு சில முறை ஸ்குவாட்ஸ், நுரையீரல் போன்ற பளு தூக்கும் பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்.

உடல் கொழுப்பைக் குறைக்கும்

சைக்கிள் ஓட்டுதல் உடல் கொழுப்பைக் குறைத்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.  பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

வீட்டுக்குள் மேற்கொள்ளும் சைக்கிளிங் பயிற்சி நம் உடலின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மன நலன், மன உறுதிக்கு நல்லது

சைக்கிள் ஓட்டுதல் மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்ற உணர்வுகளை எளிதாக்கும்.  சைக்கிள் ஓட்டும்போது சாலையில் கவனக்குவிப்பை ஊக்குவித்து, நிகழ்காலம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவும்.

சதா சர்வகாலம் எதையாவது யோசித்து மனதில் உரையாடிக் கொண்டிருப்பவர்கள் கவனத்தை அதிலிருந்து விலக்கி கவனக் குவிப்பை ஊக்குவிக்கும்.

நீங்கள் மந்தமாகவோ, சலிப்பற்றவர்களாகவோ அல்லது உங்கள் மூளை மெதுவாக நகர்வதைப் போலவோ உணர்ந்தால், குறைந்தது 10 நிமிடங்கள் சைக்கிளிங் செல்லுங்கள், எண்ண ஓட்டம் மேம்படுவதை உணர்வீர்கள். உடற்பயிற்சி உங்கள் உடலில் எண்டோர்ஃபின் வெளியீட்டை ஊக்குவிக்கும். வீட்டை விட்டு வெளியே சென்று வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வதே இந்த விளைவுகளை அதிகரிக்கும்.

இருதய மேம்பாடு, உடல் சமநிலை

உடலின் ஒட்டுமொத்த சமநிலையையும் ஒருங்கிணைப்பையும் நடையையும் மேம்படுத்த சைக்கிளிங் உதவுகிறது.

மேலும் மூட்டுப் பிரச்னைகள், குறிப்பாக உடலின் கீழ் பகுதியில் பிரச்னை இருப்பவர்களுக்கு சைக்கிளிங் மிகச் சிறப்பான பயிற்சியாக உள்ளது. அதேபோல் இருதய செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் சைக்கிளிங் அருமையான வழியாகும்.

சைக்கிளிங் பயிற்சியின் மிகப்பெரும் குறையாக இருப்பது சாலை விபத்துகளும் பாதுகாப்பற்ற தன்மையுமே. எனவே இரண்டு மடங்கு கவனத்துடன் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளுங்கள், பலன்களைப் பெறுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget