தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்!
Healthy Lifestyle: உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் ஏன் முக்கியம் என்பது பற்றி காணலாம்.
உங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவே இல்லை என்ற வருத்தம் இருக்கா? அதற்கு நிபுணர்கள் வழங்கும் சில எளிய டிப்ஸ் பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையை ஆரோக்கியமான நிர்வகிக்க சில வழிகளை பின்பற்றலாம். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது அல்லது ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமானது. இதைச் செய்ய பல எளிய, செலவு இல்லாத வழிகள் உள்ளன. கவலை வேண்டாம். ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன விசயங்களை செய்வது பலனளிக்கும்.
புரதம், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்:
பொதுவாக கிடைக்கும் தகவல்கள் எல்லாருக்கும் உதவிடாது. அப்படியானற்றில், வெதுவெதுப்பான நீர் உடல் எடையை குறைக்க உதவும் என்ற தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். அதை தொடர்ந்து கடைப்பிடித்தும் வருந்திருப்போம். ஆனால், சில பலனளிப்பதாக இருக்கும். குறிப்பாக தொப்பையை குறைப்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும். முறையான டய்ட், உடற்பயிற்சி பின்பற்ற வேண்டும். காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக சாப்பிட வேண்டும்.
புரதம், நார்ச்சத்து நிறைந்த காலை உணவு உடல் எடை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. காலை உணவை சரியாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை உணவு அன்றையா நாளுக்கான சக்தியை வழங்குவது. இதோடு மன அழுத்தத்தை நிர்வகிப்பது, வாரத்திற்கு 150 நிமிடங்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூக்கம் - இவை அனைத்தையும் முறையாக செய்தால் தொப்பையை குறைப்பது கடினமாக இருக்காது.
நடைப்பயிற்சி:
ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறுவது சோர்வாக இருக்கலாம். தண்ணீர் பாட்டில் எடுக்க வேண்டும்; ஹூ வேண்டும்; ஜிம்மிற்கு பதிவு செய்ய வேண்டுமா? ஒவ்வொரு நாளும் ஓடவும் அல்லது அடிப்படை ஜாகிங் செய்யணுமே என்று யோசிக்கலாம். ஆனால், இவை அனைத்தும் உங்களின் உடல்நலை பேணுவதற்கு உதவும்.
இறுதியில், செயல்பாடு தொடர்பான செலவுகள் எதுவும் இல்லை. உடல் செயல்பாடுகளில் தவறாமல் ஈடுபடுவதும் அதற்கான திட்டங்களை உருவாக்குவதும் அதன் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.
அதிக நேரம் உட்காந்தே இருக்கும்படியான வேலைகளை செய்ய வேண்டாம்.. தொழில் ரீதியிலாக உங்களுக்கு ஃபோன் பேச வேண்டும் என்றால் வீட்டிற்குள்ளேயே நடந்துகொண்டே பேசலாம். அலுவலகத்தில் லிப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம்.
10 நிமிடகளாவது ஒதுக்கவும்:
30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை எனில், உங்கள் இதயத் துடிப்பையும் மூளைச் சக்தியையும் அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை 10 நிமிடங்களாவது செய்யலாம். நீங்கள் அதை ஒரு பயிற்சி என்று அழைக்க வேண்டிய அவசியமில்லை. சிறிது நேரம் ஸ்பிரிண்ட் செய்யலாம். குனிந்து, தரையைத் தொடவது போன்றவற்றையும் செய்யலாம். உங்களுக்குப் பிடித்தமான இசையுடன் நடனமாடலாம். நடனம் சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். இது உண்மையில் உங்கள் இதயத் துடிப்பை விரைவாக உயர்த்தி சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
தண்ணீர்:
நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். நல்ல உடல் நிலையில் உள்ள அனைவரும் அருகில் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக்கொண்டு நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.