Health Tips : சர்க்கரை அளவுகூட குறையும்.. வெங்காயத்தில் இருக்கு விதவிதமான பலன்கள்!
உங்கள் சமையலறையில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை, மிக எளிதாக கட்டுப்படுத்தலாம்.
உங்கள் சமையலறையில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு, உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை, மிக எளிதாக கட்டுப்படுத்தலாம். பைந்தமிழர் வாழ்க்கையில் உணவே மருந்து என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே உங்கள் சமையலறையில் இருக்கும் இஞ்சி,மஞ்சள்,தேன்,மிளகு, சீரகம்,லவங்கப்பட்டை,பூண்டு மற்றும் வெங்காயம் என்று தென்னிந்திய சமையலறைகளில் இருக்கும் சமையல் பொருட்களை, அல்லது மூலிகை பொருள்களை கொண்டு ரத்தச் சர்க்கரை அளவிலிருந்து புற்றுநோய் வரை குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் வெங்காயமானது, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.வெங்காயச் செடியின் மற்ற பாகங்கள் பாரம்பரிய மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
வெங்காயத்தில் உள்ள சல்பர் சேர்மங்களான எஸ்-மெத்தில்சிஸ்டைன் மற்றும் ஃபிளாவனாய்டு குர்செடின் ஆகியவை ரத்தத்தில் உள்ள சக்கையின் அளவை குறைப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் பைந்தமிழர் வாழ்க்கையில் வெங்காயமானது,நடைமுறையில் இருக்கிறது. இங்கு பழைய சோறு வெங்காயம், கூழ் வெங்காயம்,களி வெங்காயம் என பைந்தமிழ் உணவுப் பழக்கத்தில் காலை அல்லது மதிய உணவின் தொடுகரியாக, வெங்காயமே பிரதான பட்டியலில் இருக்கிறது.
2015-ல் சான் டியாகோவில் நடந்த எண்டோகிரைன் சொசைட்டியின் 97வது வருடாந்திர கூட்டத்தின் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி செயற்கையாக சர்க்கரை நோய் உருவாக்கப்பட்ட மூன்று எலிகளுக்கு வெங்காய சாற்றை கொடுத்து பரிசோதித்துப் வார்த்தையில் 50 சதவீதத்திற்கு சர்க்கரையின் அளவு குறைந்து இருப்பதை இந்த ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது.
மேலை நாடுகளைப் பொறுத்தவரை, தென்னிந்தியர்களின்,குறிப்பாக தமிழர்களின் சமையலறையில் இருக்கும் உணவுப்பொருட்களின் நன்மைகளை குறித்து தற்சமயங்களில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் முன்பே அனுபவத்தில் உணர்ந்த தமிழர்கள் தங்கள் பாரம்பரிய சமையலில் வெங்காயம் இல்லாமல் எந்த ஒரு சமையல் செய்வது கிடையாது.
காலையில் பழைய சோற்றுக்கு வெங்காயம் அல்லது களிக்கு வெங்காயம் அல்லது இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு வெங்காய சட்னி என்று வெங்காயத்தின் பயன்பாட்டை அனுபவிதியாக கொண்டு வந்துள்ளனர். இதைப்போலவே மத்தியானம் சமையலிலும் கூட பொரியலோ, கூட்டோ வெங்காயம் இல்லாமல் இருக்காது .இதைப் போலவே அசைவ உணவுகளிலும் கூட வெங்காயம் இல்லாமல் எந்த ஒரு சமையலும் கிடையாது.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி மற்றும் பார்வை மங்குதல் போன்றவை குணமாகும். சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும். வெட்டுக்காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.
இந்த வெங்காயமானது பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் என்று இரண்டு வகைகளில் இருக்கிறது. ப்ரொபைல் டை சல்பைட் என்ற பொருளே,வெங்காயத்தின் காரத்தன்மைக்கும் கண்களில் நீர் வருவதற்கும் முக்கியமான காரணமாகும்.
வெங்காயமானது தேள் கடிக்கு மருந்தாக பயன்படுகிறது. புகையிலையினால், நுரையீரல் சீர்கெட்டு இருக்கும் நபர்களுக்கு, தினமும் வெங்காயச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பலப்படும். வெங்காயத்தின் சாரானது தோல் பிரச்சினைகளுக்கு ஆகச் சிறந்த மருந்தாக இருக்கிறது.இவ்வாறாக பைந்தமிழரின் அனுபவத்தில், சிறப்புற்று இருக்கும் வெங்காயத்தின் நன்மைகளை இதுவரை பயன்படுத்தாத உலக மக்களும் பயன்படுத்தி பலன் பெற வேண்டும்