Navratri : 700 ஆண்டுகால பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி.. துர்க்கை கோவில் நிர்வாகம் செய்த அதிரடி..
பேகுசாராய் துர்க்கை அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மிருகங்களை பலியாக கொடுக்கும் சம்பிரதாய பழக்கவழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பேகுசராய் துர்கா கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலுக்கு என்று தனித்துவமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நவராத்திரி முதல் பேகுசராய் துர்கா கோயிலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக அக்கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
அதாவது இந்த துர்க்கை அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மிருகங்களை பலியிடும் சம்பிரதாய பழக்கவழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேகுசாராய் கோவிலில் துர்க்கை பூஜையை ஒட்டி ஆண்டுதோறும் சுமார் 10,000 விலங்குகள் பலியிடப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இங்கு பக்தர்கள் தமது வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில், இந்த விலங்குகளை பலியிட்டு காணிக்கையாக்குவதாக சொல்லப்படுகிறது.
வழக்கம்போல பிஹாரில் உள்ள பேகுசராய் துர்கா தேவியின் பக்தர்கள் நவராத்திரியை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். இருந்தபோதும் அதன் சம்பிரதாய பழக்க வழக்கங்களில், அக்கோயில் நிர்வாகத்தினர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்
பேகுசாராய் மாவட்டத்திலிருந்து சுமார் 33 கிமீ தொலைவில் , லகான்பூரில் உள்ள துர்கா கோயில், மாவட்டத்தில் இருக்கும் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர்களின் விருப்பத்திற்காக மிருக பலி கொடுக்கப்பட்ட வரலாற்று கதைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, இங்கு 700 ஆண்டு பழமையான மிருக பலி பாரம்பரியம் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .தற்போது பேகுசராய் துர்க்கை அம்மனுக்கு விலங்குகளுக்கு பதிலாக, பூசணி, கரும்பு போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் படையல் வைக்கிறார்கள்
முதல் முறையாக இந்த ஊருக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது .அதேபோல் துர்கா தேவியை தரிசனம் செய்ய ,கோவிலுக்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். பேகுசராய் மட்டுமின்றி, பீகார், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இங்கு வந்து வேண்டுதல்களை முன்வைத்துச் செல்கின்றனர். சமீபத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்து ஆசி பெற்று சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பேகுசராய் துர்க்கை அம்மன் கோவில் ஸ்தாபிக்கப்பட்ட அன்றிலிருந்தே இந்த விலங்குகளை பலியிடும் வழக்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது. துர்கா பூஜையின்போது, பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 விலங்குகள் பலிகொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நவராத்திரி முதல் விலங்குகளை பலியிடும் வழக்கம் முழுவதுமாக ஒழிக்கப்படும் என அந்தக் கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பொதுவாக வட மாநிலங்களில் மிருகவதை தடைச் சட்டம் அமலில் இருப்பதாலும், மிருகங்களை கொல்வது பாவம் என்ற அடிப்படையில் ,இந்த பாரம்பரிய வழக்கமான மிருக பலி கொடுப்பது துர்க்கை அம்மன் கோவிலில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது துர்க்கா தேவி கோவிலில் விலங்குகளுக்கு பதிலாக, பூசணி, கரும்பு போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை படையலாக வைக்க பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேகுசராய் உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, இது துர்கா சக்திபீடம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
700 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் உள்ள நதியா என்ற இடத்திலிருந்து குல்தேவி என்ற பெயரில் ,துர்க்கை சிலை கொண்டுவரப்பட்டு லக்கன்பூரில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துர்க்கை அம்மன் கோவிலில் வழிபாட்டு முறை என்பது பெங்காலி பாரம்பரிய வழக்கப்படி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரின் பேகுசாராய் நகரில் உள்ள வங்காள சமூக மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே துர்க்கை அம்மன் கோவில் இதுவாகும்.