பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல் ‛ரெசிபி’; 30 நிமிடத்தில் சுடச்சுட தயார்!
பண்டிகை நாட்களில் எப்போதும் செய்யும் சமையலை விட அதிகமாக செய்ய வேண்டியதாக இருக்கும்இதை தவிர்க்க வேறும் 30 நிமிடங்களில் எளிமையாக செய்ய சில உணவு ரெசிபிக்களை பார்க்கலாம்.
பண்டிகை நாட்களில் எப்போதும் செய்யும் சமையலை விட அதிகமாக செய்ய வேண்டியதாக இருக்கும். அதனால் குடுமபத்துடன் நேரத்தை செலவழிப்பது குறைந்து நீண்ட நேரம் அடுப்படியில் இருந்து வேலை செய்து வேர்த்து கொட்டி மசாலா வாசனைகளுடன் அந்த நாள் செல்லும். இதை தவிர்க்க வேறும் 30 நிமிடங்களில் எளிமையாக செய்ய சில உணவு ரெசிபிக்களை பார்க்கலாம்.
பேரிச்சம் பழம் பர்பி
தேவையான பொருள்கள்
பேரீச்சம் பழம் - 400 கிராம்
கசகசா - 20 கிராம்
பாதாம் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
உலர்திராட்சை - 50 கிராம்
தேங்காய் துருவல் - 25 கிராம்
ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
நெய் - 75 கிராம்
செய்முறை
- பேரிச்சம் பழத்தை அரைத்து வைத்து கொள்ளவும். கசகசா விதைகளை தனியாக வறுத்து வைத்து கொள்ளவும்.
- நெயில் முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து , அதனுடன், தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். பின் பேரிச்சம் பழம் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் நன்றாக வறுத்து கொள்ளவும்.
- அதே சூட்டுடன் ஒரு தட்டில் போட்டு சமநிலை படுத்தி அதன் மேல் கசகசா விதைகளை தூவி சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து கொள்ளலாம்.
இது மிகவும் எளிமையாக செய்ய கூடியது. குறைந்த நேரத்தில் செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுக்கலாம்.
கேசரி ஸ்ரீகண்ட்
தேவையான பொருள்கள்
குங்கும பூ இலைகள் - 15- 20
பால் - 500 மிலி ( குளிர்விக்கப்பட்டது )
தயிர் - 500 மிலி
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
உளர் பழங்கள் தேவையான அளவு
செய்முறை -
- குங்கும பூவை பாலில் 3- 4 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
- இதனுடன் தயிர், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- மேலே உளர் பழங்களை சிறிது சிறிதாக வெட்டி மேலே தூவி பரிமாறலாம்.
பரிமாறுவதற்கு முன் இதை பிரிட்ஜில் வைத்து சில் என்று பருகலாம்.மிகவும் குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து அனைவருக்கு கொடுத்து இனிப்புடன் பண்டிகை கொண்டாடலாம்.
காஷ்மீர் அல்வா
தேவையான பொருள்கள்
ஓட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 2 கப்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
குங்கும பூ , உளர் பழங்கள் - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றை ஓட்ஸ் முதலில் வறுத்து கொள்ளவும். தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- அதே பாத்திரத்தில், பாலை மற்றும் சர்க்கரை ஊற்றி சூடாக்கவும். சர்க்கரை முழுமையாக கரைந்த பிறகு, அதனுடன், வறுத்த ஓட்ஸ் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்.
- இதனுடன் குங்கும பூ சேர்த்து கொள்ளவும். முழுமையாக அல்வா பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொள்ளவும்.
- மேலே உளர் பழங்கள் தூவி பரிமாறலாம்.