மேலும் அறிய

Annular Solar Eclipse: இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம்.. மக்களுக்கு எச்சரிக்கை

Annular Solar Eclipse 2026: 2026ம் ஆண்டுக்கான முதல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் பிப்ரவரி 17ம் தேதியான இன்று நிகழ்கிறது. இந்த கிரகணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் காணலாம்.

2026ம் ஆண்டுக்கான முதல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் பிப்ரவரி 17ம் தேதியான இன்று நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியுமா, வேறு என்ன மாற்றங்கள் நிகழும் என்பது பற்றிக் காணலாம். 

வானியல் நிகழ்வுகள் எல்லாம் அதிசயம் தான். அது எப்போது நிகழ்ந்தாலும் நாம் காண ஆர்வமாக இருப்போம். ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம், கோள்களின் சுற்றுவட்டப்பாதையில் நிகழும் மாற்றம் என பலவகையான நிகழ்வுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ம் தேதியான இன்று நிகழப்போகிறது. இது நெருப்பு வளையம் சுற்றி இருப்பது போல தோன்றுவது கூடுதல் சிறப்பாகும். 

சூரிய கிரகணம் என்பது நிலவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது சூரிய ஒளியானது தடுக்கப்பட்டு பூமியில் முற்றிலும் நிழல் விழும் நிகழ்வாகும். இந்த கிரகணங்கள் பூமியின் மேற்பரப்பில் சிறிய அளவிலான பகுதியில் மட்டுமே தெரியும் என்பதால் வருடத்திற்கு இரண்டு முதல் ஐந்து முறை நிகழும். நாசாவின் தகவலின்படி, “சூரிய கிரகணத்தின் போது நிலவு சூரியனை முழுவதுமாக மறைக்காது. அது பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தோன்றுகிறது. இதனால் நிலவு ஒரு பெரிய, பிரகாசமான வட்டத்தின் மேல் இருப்பதாக தோன்றுகிறது. அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. 

சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா?

இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் துரதிஷ்டவசமாக இந்தியாவில் தெரியாது. காரணம் இதனை இந்த முறை அண்டார்டிகாவின் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலிருந்து மட்டுமே காண முடியும்.  இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் 2 நிமிடங்கள், 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியனின் மையத்தின் 96%  நிலவால் மறைக்கப்படும் எனவும், கிரகணம் பிப்ரவரி 17 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு நிகழும் என சொல்லப்பட்டுள்ளது. 

அண்டார்டிகா கண்டத்தில்  கான்கார்டியா மற்றும் மிர்னி போன்ற இடங்களிலும், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் பகுதியளவும், தென் அமெரிக்காவின் அர்ஜென்டினா மற்றும் சிலியின் சில பகுதிகளில் மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடியும்.

சூரிய கிரகணத்தை நாம் வெற்றுக் கண்ணால் காணக்கூடாது. சூரிய ஒளியை ஊடுருவக்கூடிய கண்ணாடிகளை நாம் பயன்படுத்தி பார்க்கலாம். சூரிய கிரகணம் பார்ப்பவர்களாக இருந்தால் குறைவான நொடிகள் மட்டுமே பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கண்ணில் பாதிப்பு உண்டாகலாம். மேலும் கிரகணம் நிகழும்போது வெளியில் செல்லும்போது தவிர்க்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
Embed widget