மேலும் அறிய

காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!

காலம் முழுவதும் துணை நின்ற மனைவியை பிரிந்து செவிலியரை மணந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் வாழ்க்கையின் சர்ச்சைக்குரிய அத்தியாயம்.

உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவராக போற்றப்படும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், தனது அறிவாற்றலாலும் அறிவியல் சாதனைகளாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக திகழ்ந்தவர். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், குறிப்பாக முதல் மனைவி ஜேன் ஹாக்கிங்ஸுடனான உறவு, பல ஆண்டுகளாக விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

காலம் முழுவதும் துணை நின்ற மனைவி

21 வயதிலேயே ALS (Amyotrophic Lateral Sclerosis) என்ற நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட ஹாக்கிங்ஸுக்கு, மருத்துவர்கள் மிகக் குறுகிய ஆயுளையே கணித்தனர். அப்போது அவரை விட்டு விலகாமல் நின்றவர் அவரது காதலியும் பின்னர் மனைவியுமான ஜேன் வைல்ட். 1965-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே ஹாக்கிங்ஸின் உடல்நிலை மோசமடைந்தது. அவரால் நடக்கவோ, பேசவோ முடியாத நிலை ஏற்பட்டது. மூன்று குழந்தைகளை கவனித்ததோடு, கணவரின் முழு பராமரிப்பையும் ஜேன் தனியாக மேற்கொண்டார். ஹாக்கிங்ஸ் தனது ஆராய்ச்சிப் பணிகளை தொடர்வதற்கான சூழலை உருவாக்கியதில் ஜேனின் பங்கு மிகப்பெரியது என்று அவரது வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

செவிலியருடன் காதல் 

இதற்கிடையில், ஹாக்கிங்ஸின் மருத்துவ பராமரிப்புக்காக பல செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான எலெய்ன் மேசனுடன் (Elaine Mason) ஹாக்கிங்ஸ் நெருக்கமாக பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த உறவு, ஜேன் மற்றும் ஹாக்கிங்ஸ் இடையேயான திருமணத்தில் விரிசலை ஏற்படுத்தியதாக பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கதையில் அதிகம் பேசப்பட்ட மற்றொரு நபர் எலெய்னின் கணவர் டேவிட் மேசன் (David Mason). அவர் ஒரு பொறியியலாளர். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தனது குரலை உலகம் முழுவதும் கேட்கச் செய்த புகழ்பெற்ற கணினி அடிப்படையிலான speech synthesizer கருவியை உருவாக்கிய குழுவில் முக்கிய பங்கு வகித்தவர். ஹாக்கிங்ஸ் பயன்படுத்திய தகவல் தொடர்பு அமைப்பை மேம்படுத்தியதில் டேவிட் மேசனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பின்னர், எலெய்ன் தனது கணவர் டேவிட் மேசனை விவாகரத்து செய்தார். அதன் பிறகே ஹாக்கிங்ஸும் ஜேனும் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து 1995-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங்ஸும் எலெய்ன் மேசனும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் திருமணம் அப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட காலம் கணவரின் உடல்நலனுக்காக தன்னை அர்ப்பணித்த ஜேனை விட்டு, அவரது சிகிச்சையில் ஈடுபட்டிருந்த செவிலியரையே ஹாக்கிங்ஸ் திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தைவானை சீர்குலைத்த 'சாம்பி': 500 பேர் படுகாயம் - 1000 விமான சேவைகள் ரத்து
தைவானை சீர்குலைத்த 'சாம்பி': 500 பேர் படுகாயம் - 1000 விமான சேவைகள் ரத்து
விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
Embed widget