Valentine's Day Google Doodle:காதலர் தின கொண்டாட்டம் - கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல் கேம்!
Valentine's Day Google Doodle: அறிவியல் கேம் உடன் காதலர் தினத்தை கொண்டாடுங்க.
![Valentine's Day Google Doodle:காதலர் தின கொண்டாட்டம் - கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல் கேம்! All About Chemistry Google Doodle Celebrates Valentine's Day 2024 With A Scientific Twist Valentine's Day Google Doodle:காதலர் தின கொண்டாட்டம் - கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல் கேம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/24029298ad052023202cc1e8b0187f111707892472123333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காதலர் தினத்தை (Valentine's Day) முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் பீரியாட்டிக் டேபிள் (Periodic table) தனிம வகைகளுடன் கெமிஸ்ட்ரியை ஆராயும் விதமாக அமைந்துள்ளது.
உலக அளவில் இன்று (பிப்ரவரி,14-ம் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் என்ற உணர்வு பரவசமூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது. ரத்த சொந்தம் அல்லாமல் இரு வெவ்வேறு உலகில் வளர்ந்து வாழ்ந்தவர்களிடையே உருவாகும் ஓர் உணர்வு. காதலில் திளைத்திருப்பது என்பது மகிழ்ச்சியானது. இருப்பினும், காதல் என்பது மரியாதை, சுதந்திரம், வளர்தல், புரிதல், உரையாடல் ஆகியவைகளும் அதில் அடங்கும். காதலர்கள் பூங்கொத்து, க்ரீட்டிங் கார்டு, நேரம் சாக்லெட், பரிசு பொருட்கள் என கொடுத்து காதலர் தினத்தை கொண்டாடலாம்.
கூகுள் டூடுல்
ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். அதன்படி, இன்ட்ராக்டிவ் டூடுல் வெளியிட்டுள்ளது. 'diatomic bond' குறித்து கேம் ஒன்றை வழங்கியுள்ளது. தனிம அட்டவணையின்படி, காதலர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி மேட்ச் செய்வதாக உள்ளது.
- https://g.co/doodle/mtzp4gu - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- தனிம அட்டவணையில் உள்ள எந்த பர்ஸ்னாலிட்டி என்பதற்கு கேள்விகள் அடங்கிய 'Quiz' கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஃப்ரி ஸ்பிரிட், கோ வித் அ ஃப்ளோ, ‘ என சில ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஐந்து கேள்விகளுக்கு பதிலளித்தால் ‘உங்களுக்கான தனிம என்ன?’ என்பதை கூகுள் தேர்வு செய்துவிடும். (உதாரணமாக..ஹைட்ரஜன்)
- அடுத்து, ’ Start Bond' என்றிருப்பதை க்ளிக் செய்யவும்.
- அதில், குளோரின் (Cl), ஆக்ஸிஜன் (O), ப்ரோமைன் (Br), அயோடின் (I),நைட்ரஜன் (N) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
- உதாரணமாக குளோரின் தெரிவு செய்திருந்தால் அதன் பண்புகள் பற்றிய சிறு குறிப்பும் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.
- குளோரின் - ‘நான் ரொம்ப ரியாக்டிவ் எலமெண்ட்’ என்றிருக்கும்.
- ’ Start Bond' லாங்க் ப்ரஸ் செய்தால் ரெண்டு தனிமங்களும் ஒன்றாகும். அப்போது கிடைப்பது. HCL..
- ஹைட்ரோகுளோரிக் ஆசிட். உணவு செரிமானத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆசிட் இது.
- 18 ’Bond' கண்டுபிடித்தால் ஒரு பிக்சர் கிடைக்கும் .
காதலர் தினத்தில் கெமிஸ்ட்ரி என்னனு கேம் விளையாடி நாம் வேதியியல் வகுப்புக்கு சென்று வந்தது போன்ற உணர்வை தரும் என்றும் சொல்லலாம்.
காதலர் தின நல்வாழ்த்துகள்..
மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)