மேலும் அறிய

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

Valentine's Day 2024 Wishes in Tamil : இந்தாண்டின் காதலர் தினத்தன்று, காதலர்களுடன் பகிர கூடிய ஸ்பெஷல் கவிதைகள் இங்கே..

Valentines Day Wishes in Tamil: காதலர் தினம் உருவானதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனாலும் அதன் வரலாறு தெரியாமலே காதலர் தினத்தை கொண்டாடுவது, நமக்கு பிடித்த நபருடன் அந்த நாளை அவர்களுடன் கழிப்பது என்பது இன்றைய தலைமுறையினருக்கு அலாதிதான். ஆதாம் ஏவால் கதையில் தொடங்கி புறாவில் தூதுவிட்ட காலம் சென்று ஃபேஸ்புக் காலத்தையும் கடந்து, இன்ஸ்டா வாட்ஸ்-அப்பில் ஸ்டிக்கர் அனுப்பி அன்பை வெளிப்படுத்தும் இந்த காலம் வரை காதல் நிலைத்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதம் மாறிவிட்டது என்றாலும் காதல் எப்போதும் காதலாகவே இருக்கிறது.

காதலர்களுக்கு ஒரு ரோசாப்பூ, கிரீட்டிங் கார்டு, சாக்லேட் என விதவிதமான பரிசுகளை நேரில் கொடுத்து மகிழ்ந்த, வெட்கப்பட்ட காலங்கள் ஒன்று உண்டெனில் தற்போது காலத்திற்கேற்ப செல்போனில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதும் ஒரு பேரன்பாக மாறிவிட்டது. 

அதன்படி பேரன்புக்குரியவர்களுக்கான காதலர் தின ஸ்பெஷல் பதிவு, கவிதை, வாழ்த்துகளை இங்கு காணலாம். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பி மகிழுங்கள். மகிழ வையுங்கள். 

ஒருவனைக் காதலி 

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

உன்னை மட்டும் பிடிக்கிறது 

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

உன்னை நான் நேசிக்கிறேன் என்று உலகின் எந்த மொழியிலும் சொல்வேன் 
இன்றே பிறந்த பிஞ்சு மொழியிலும் இன்னும் பிறக்காத ஒரு மொழியிலும் உன்னை நான் நேசிக்கிறேன் தமிழில்தான் சொல்ல வேண்டுமென்று கண்களிடம் கேட்க முடியுமா?

- ஜெ.பிரான்சிஸ் கிருபா

என் மனதில் என்றென்றும் நீ!

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

நவீன காதல் 

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

காதலுடன் கிரிஞ் கலந்த போது.. 

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

எளிமையானது அன்பு. நடு ஆற்றில் அள்ளிய சிக்கல் இல்லாத தண்ணீர் போல..

-சுகுமாரன்

எனக்கான கவிதை நீ

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

காதலென்பது???

காதலென்பது
புனைவுக்கும் அறியாமைக்கும் நடுவே
நிறைய தர்க்கங்களை வைத்துச்
செய்யப்பட்ட சாண்ட்விஜ்
அவநம்பிக்கையின் குடிசையை
வாஞ்சையாய் உரசும் பௌர்ணமி
காதலென்பது
ரகசியமாய் எரிக்கப்படும்
கறைபடிந்த உள்ளாடை

காதலென்பது
வெடிகுண்டு சுற்றும்போது
காப்பாய் அணைத்துக்கொள்ளும் பெருமரம்
பிரசவக்காரிக்கு மருந்தரைத்த
குழவி வாசனை
காதலென்பது
மீச்சிறு மலரின் தேனுக்கு
மண்டியிடும் டினோசர் பற்றிய கதை

காதலென்பது
துரோகத்தின் வெறிக்கூத்தில்
பரிமாறப்படும் ஊன்சோறு
குடுவை அமிலத்திற்குள் மிதக்கும்
பாடம் செய்யப்பட்ட கரங்களின் அபிநயம்
காதலென்பது
சாக்குருவியின் அகாலத்து வசைக்கூவல்

காதலென்பது
காயங்களைக் கொண்டு குறிசொல்கிறவளின்
கள்ளச்சிரிப்பு
பெருங்கடனாளியின் ஆழ்ந்த உறக்கம்
பருவகாலங்களின் லயத்தில்
நிகழும் உயிர்நெசவு
காதலென்பது
ரத்தநாளங்களைச் சொடுக்கி
செய்யப்படும் தொல்சிகிச்சை

காதலென்பது
பஞ்சகாலத்தில் அடகுவைக்கப்படும்
உழுகருவிகளின் துரு
உடன் விற்கப்படும் குழந்தையின் கதறல்
மனப்பிறழ்வுக்காரர்கள் கொளுத்திய தீயில்
எரியும் தேன்கூடு
காதலென்பது
படுக்கையறைகளில் நூற்றாண்டுகளாய்
தீராதிருக்கும் தலைவலித் தைலம்

காதலென்பது
ஆகோள் பூசலில் வீழ்ந்தோரது நடுகல்தேடி
ஏறுங்கொடியில் விரியும் வள்ளிப்பூ
நாதியற்றவளின் முந்தியில் தானாய் நிறைகிற
குளத்து அயிரைகள்
காதலென்பது
கைதவறிச் செல்லும் வீடியோ அழைப்பில்
வேற்றுகிரகவாசி தரும் முத்தம்

காதலென்பது
பாவமன்னிப்புக் கூண்டருகே கிடக்கும்
முழந்தாள் பலகையின் தேய்மானம்
முள்வேலிக் கம்பிகளால் முறுக்கிய கிடார்
வறண்ட பூமியில் மேகங்களை வசியும் செய்யும்
கூத்துக்காரர்களின் சாமத்து அடவு
காதலென்பது
காவலற்ற
பகையாளியின் திராட்சைத் தோட்டம்

காதலென்பது
நெஞ்செலும்புகளை நொறுக்கும் இளவட்டக்கல்
பாலுறுப்புகளைப் போன்ற மலர்களை கனிகளை
காணச் சமன்குலையும் வேதியியல்
நறுக்கப்பட்ட மூக்கு, காது, நாக்கு மற்றும் தலைகள்
காதலென்பது
மிருக மொழியிலான காவியம்

காதலென்பது
பூடகமான ஓவியத்தின் கீழ் 
இடப்பட்ட போலிக்கையெழுத்து
கஞ்சாவுக்குச் சுருட்டப்படும் 
தற்கொலைக் கடிதம்
காதலென்பது
வேட்டைநாய் கவ்விவரும் வகுளம்பூ

காதலென்பது...?

- வெயில்

புன்னகைத்து முகம் சிவக்கிறது

Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget