பாலை நிலத்தை பூஞ்சோலையாக மாற்றிய ‛விவசாயி’ தேவயாணி... குவியும் பாராட்டுக்கள்!
விவசாயத்தை காக்கப்போகிறோம் என்று வரும் படங்களில், பெரிய நிறுவன வேலைகளை கைவிட்டு நாயகன் விவசாயம் செய்வது போல் காட்சி அமைத்திருப்பார்கள். ஆனால், இதை உண்மையாகவே செய்து கொண்டிருக்கிறார் நடிகை தேவயாணி.
விவசாய நிலங்களை பிளாட்டுகளாக்கி வீடுகளை கட்டி வரும் மக்களுக்கு மத்தியில், வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாய நிலமாக மாற்றி இருக்கிறார் நடிகை தேவயாணி.
தற்போது விவசாயத்தை காக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு வரும் படங்களில், பெரிய நிறுவன வேலைகளை தூக்கிவீசிவிட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்து நாயகன் கஷ்டப்படுவதை போல் காட்சி அமைத்திருப்பார்கள். ஆனால், இதை உண்மையாகவே செய்து கொண்டிருக்கிறார் நடிகை தேவயாணி.
1990, 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வளம் வந்தவர் தேவயாணி. அஜித் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற காதல் கோட்டையில், நடித்த இவருக்கு அடுத்து அனைத்துமே வெற்றிக்கோட்டை தான். விஜய், அஜித், சரத்குமார், மம்முட்டி, சத்யராஜ், பிரபு என அப்போது முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சூர்ய வம்சம், பிரெண்ட்ஸ் போன்ற படங்களில் முக்கிய நாயகி தேவயாணி தான். குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்து ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பெண்ணாகவும் மாறினார் தேவயாணி.
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய போது இயக்குநர் ராஜகுமாரனுக்கும், தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2001 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கமிட்டான நியூ போன்ற சில படங்களில் நடித்தார் தேவயாணி. அதன் பிறகு சன் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பான கோலங்கள் என்ற நெடுந்தொடரின் மூலம், திரையரங்கத்தில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்தார் தேவயாணி.
சீரியல் பெரும் ஹிட்டானது. தேவயாணி தங்கள் குடும்பப் பெண்ணாக பார்க்கத் தொடங்கினார்கள் பெண்கள். தேவயாணி என்ற பெயரே மாறி அபி என்ற பெயர் மக்கள் மனதில் பதிந்தது. அதன் அலைகள், மஞ்சள் மகிமை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார். அதில் இவர்கள் தயாரித்த 2 படங்களும் தோல்வி அடைந்தன.
அதன் பிறகு சென்னையை சேர்ந்த பள்ளி ஒன்றில் தேவயாணி பகுதி நேர ஆசிரியையாக பணியாற்றி வந்த தேவயாணி புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார் தேவயானி. இந்த நிலையில் தான் நடிகை தேவயானி கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்த அவரது சொந்த ஊரான அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தில் விவசாய செய்வதாக தகவல் கிடைத்து உள்ளது.
இங்கு அவர்களுக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. ஊரடங்கு காலத்தில் குடும்பத்துடன் அங்கு சென்று தங்கிய தேவயாணி கணவருடன் விவசாய செய்து வருகிறார். கிராமமும், விவசாயமும் தேவயாணிக்கு பிடித்து விட்டதால் ஊரடங்கு முடிந்த பின்பும் சென்னையை விட அங்கேயே அதிக நாட்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களது தோட்டத்துக்கு அருகே 2 ஏக்கர் விவசாய நிலத்தை அதன் உரிமையாளர் விற்பனை செய்வதற்காக வீட்டு மனைகளாக மாற்றியுள்ளார். இதனை அறிந்த தேவயானி அந்த நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கி விவசாய நிலமாக மாற்றி செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். புத்துயிர் பெற்ற அந்த நிலத்தில் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது.