மேலும் அறிய

Trip to Namchi: இயற்கை அழகு கொஞ்சும் நாம்ச்சி - உங்கள் கோடை சுற்றுலா லிஸ்டில் சிக்கிமில் காண வேண்டிய இடங்கள்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சி பகுதி சுற்றுலா சென்றால் மிகவும் ரம்மியமான அனுபவம் கிடைக்கும்..

கோடைக்காலம் என்றதும் வாட்டி வதைக்கும் வெயில் நினைவுக்கு வரும். போலவே, கோடை விடுமுறையும் நம் மனதிற்கு எழும் ஒன்று. கோடை விடுமுறையில் நண்பர்கள், குடும்பம், தனியாக என குதூகலத்துடன் கொண்டாட்டமான சுற்றுலா செல்வோம். இல்லையா. ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டு பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியாச்சு. இப்போது, பணிச்சுமை, வழக்கமான இயந்திரத்தனமான ரொட்டீன் வாழ்க்கை முறையில் இருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு, உங்களின் புத்துணர்வை மீண்டெடுக்கும் ஒரு பயணம் செல்ல திட்டம் இருக்கிறதா? அபப்டினா, வட கிழக்கு ஊருக்கு சென்றால் இந்த கோடை நிச்சம் சூப்பராக என்ஜாய்மெண்ட் இருக்கு. அப்படி ஒரு இடம். சிக்கம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சி. (Namchi).

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், பசுமையுடனும் இயற்கையாக காட்சியளிப்பவைகள். அடந்த மரங்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் என சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. அப்படி, உங்கள் மனதிற்கு பிடித்தமான இடமாக இருக்கும், சிக்கிமில் உள்ள நாம்ச்சி..


Trip to Namchi: இயற்கை அழகு கொஞ்சும் நாம்ச்சி - உங்கள் கோடை சுற்றுலா லிஸ்டில் சிக்கிமில் காண வேண்டிய இடங்கள்

சிக்கிமில் உள்ள நாம்ச்சி என்ற சிறிய நகரம் அதன் பெயருக்கு ஏற்ப அமைந்துள்ளது.  'நாம்' என்றால் 'வானம்' மற்றும் 'சி' என்பது சிக்கிம் மொழியில் 'உயர்ந்த'. அதாவது ’Sky High’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1,675 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  காங்சென்ட்சோங்கா மலைத்தொடர் மற்றும் ரங்கிட் பள்ளத்தாக்கின் கண்கவர் காட்சிகளை வழங்குகிறது.  தெற்கு சிக்கிமின் தலைநகரம் மலையேற்றம், பறவைகள் மற்றும் மத சுற்றுலா ஆகியவற்றிற்கான ஒரு ஹாட்ஸ்பாட் ஆக வளர்ந்துள்ளது. இந்த கோடை விடுமுறையில் நாம்ச்சி பகுதிக்கு சுற்றுலா செல்ல ஏழு காரணங்களை இத்தொகுப்பில் காணலாம்.


Trip to Namchi: இயற்கை அழகு கொஞ்சும் நாம்ச்சி - உங்கள் கோடை சுற்றுலா லிஸ்டில் சிக்கிமில் காண வேண்டிய இடங்கள்

குரு பத்மஸம்பவா, ஸம்த்ருப்சே (Guru Padmasambhava, Samdruptse)

நாம்ச்சியிலிருந்து (சுமார் 7 கிமீ) மேல்நோக்கிச் சென்றால், உலகிலேயே மிக உயரமான பத்மசம்பவ சிலை அமைந்திருக்கிறது.135 அடி உயரமுள்ள பதமசம்பவாவின் சிலை,  சம்த்ருப்ட்சே மலையின் மேல் ஒரு தாமரை பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தலாய் லாமாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. குரு ரின்போச்சே என்றும் அழைக்கப்படும் பத்மசாம்பவா (Guru Rinpoche, Padmasambhava) 1200 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிம் மாநிலத்தை ஆசீர்வதித்துள்ளார். அந்த துறவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சாம்ட்ரப்ட்ஸே மலை ஆசைகளை நிறைவேற்றும் மலை என்று அறியப்படுகிறது. குறுகலான சாலைகள் உங்களை மேகங்களுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

காடக் மடாலயம் (Ngadak Monastery)


Trip to Namchi: இயற்கை அழகு கொஞ்சும் நாம்ச்சி - உங்கள் கோடை சுற்றுலா லிஸ்டில் சிக்கிமில் காண வேண்டிய இடங்கள்

இந்தியாவின் பழமையான மடங்களில் ஒன்றான நகடக் 17 ஆம் நூற்றாண்டில் சோக்யால் கியுர்மெட் நம்கியால் (Chogyal Gyurmed Namgyal) ஆட்சியின் போது கட்டப்பட்டது. இது பழமையான சிக்கிம் கட்டிடக்கலையின் பிரதிபலிப்பாகும். இது 1700 ஆம் ஆண்டில் தனது சிக்கிம் ராணியான பெடி ஓங்முவின் அரண்மனையாக இருந்தது. 1717 இல் பெடி ஓங்மு,  சாடோரின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு, அரண்மனை மடாலயமாக மாற்றப்பட்டதுசிக்கிமில் உள்ள சில சிறந்த சமகால மடாலய ஓவியங்களைக் காணலாம். இங்கு வருபவர்கள், இந்த மடத்திற்கு மீண்டும் வருவதற்கான உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. 'ங்கடக்' என்ற சொல்லுக்கு 'வாக்குறுதி' என்று பொருள். இங்கிருந்து, தொலைவில், சம்த்ருப்சேயில் பத்மசாம்பவா சிலை சூரிய ஒளியில் மின்னுவதைக் காணலாம். இது நாம்ச்சி நகரத்திலிருந்து 2.8 கிமீ தொலைவில், நாம்ச்சி-ரவங்லா சாலையில் அமைந்துள்ளது.

 

சோலோபோக் சார்தம் (Solophok Chardham)

சோலோபோக் மலையின் உச்சியில் 7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களை போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் 87 அடி உயரமுள்ள சிவன் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அருகே அமைந்துள்ள கோயிலில், அவரது கதையை சித்தரிக்கும் சுவரோவியங்கள் வரையப்பட்டிருக்கின்றனர்.  கோயிலைச் சுற்றிலும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களின் பிரதிகளும், கிராதேஷ்வர் (சிவனின் வேட்டையாடும் அவதாரம்) மற்றும் ஒரு நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு வாகனம் நிறுத்தும் வசதிகள் இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு  ஹோட்டல், யாத்ரி நிவாஸ், அடிப்படை அறைகள் மற்றும் சைவ உணவகம், பேட்டரி கார்கள் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு அமைதியான சூழலில் யோகா செய்யும் கூடமும் இருக்கிறது. இது நாம்ச்சி நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது.

 

ஷீரடி சாய் மந்திர்(Shirdi Sai Mandir)

நாம்ச்சியிலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் அசந்தாங்கில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோயில். கோவிலின் உள்ளே, ஒரு உயரமான மேடையில் அமர்ந்திருக்கும் ஷீரடி சாய்பாபாவின் பளிங்குச் சிலை அரங்கின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும். சுவர்களில் சுவரோவியங்கள் சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு சித்தரிகரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். கோவிலில் ஒரு தோட்டம் உள்ளது.

 

நாம்ச்சி ராக் கார்டன் (Namchi Rock Garden)

 

நாம்ச்சி நகருக்கும் சம்ட்ரப்ட்ஸுக்கும் (நம்ச்சியிலிருந்து சுமார் 3.5 கிமீ தொலைவில்) அமைந்துள்ள இந்த அமைதியான பூங்காவில், நீங்கள் பறவைகளின் சத்தத்தை மட்டுமே கேட்க முடியும். தோட்டத்தில் பல்வேறு உள்ளூர் தாவரங்கள், பூக்கள் மற்றும் மரங்கள், அத்துடன் அழகான நீர்நிலைகள், குளங்கள் ,குழந்தைகள் விளையாட்டு மைதானம் அகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கிருந்து நீங்கள் காங்சென்ட்சோங்காவின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

 

நாம்ச்சி ரோப்வே(Namchi Ropeway)

ஒரு உயரமான இடத்தில் இருந்து, நீங்கள் மலைகளின் அழகை காண வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் சம்த்ரப்சே மலை, பிரம்மாண்டமான பத்மசாம்பவா சிலை மற்றும் காங்சென்ட்சோங்கா போன்றவற்றின் அழகை காண, இங்கு வழங்கப்பட்டுள்ள ரோப் காரில் சென்று காணலாம். தாமோதர் ரோப்வேஸ் & இன்ஃப்ரா லிமிடெட் (டிஆர்ஐஎல்) மூலம் இயக்கப்படும் இந்த ரோப்வே பொதுப்பணித் துறை விருந்தினர் இல்லம், சம்ட்ரப்சே ஹில் மற்றும் நாம்ச்சி ராக் கார்டன் ஆகியவற்றுக்கு இடையே சுமார் 2.1 கிமீ தூரத்தை உள்ளடக்கிய பயணத்தை மேற்கொள்கிறது. இங்கே, ரோப் கார் சேவையை பெற முன்பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது. அதற்கு உங்களுடைய அடையாள அட்டையை எடுத்து செல்வது கட்டாயமாகும்.

ட்ரெக்கிங் (Treks, Hikes)

நீங்கள் மலையேறுவதில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால், சிக்கிம் சென்றுவிட்டு, தாரே பீர் பகுதி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

தாரே பீர்(Tarey Bhir) என்ற பகுதி மலையேற்றப் பாதையாகும். தாரே பிர் என்பது 10,000 அடி நீளமான ஒரு மலைப்பாதை. நீங்கள் மலையுச்சிக்கு சென்று மேகங்களுடன் கொஞ்சி பேசலாம். இந்திய ஹிமாலயன் சென்டர் ஃபார் அட்வென்ச்சர் அண்ட் ஈகோ டூரிஸம் (Indian Himalayan Centre for Adventure and Eco Tourism)மலையேறுதல் தொடர்பான படிப்புகளை நடத்துகிறது. மலையேறி சென்று இயற்கையில் அழகை ரசிக்கலாம்.


Trip to Namchi: இயற்கை அழகு கொஞ்சும் நாம்ச்சி - உங்கள் கோடை சுற்றுலா லிஸ்டில் சிக்கிமில் காண வேண்டிய இடங்கள்

பயண தகவல்கள்:

பாக்டோக்ரா விமான நிலையம், சிலிகுரி, (மேற்கு வங்காளம்) என்பது ஏர் ஏசியா, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ போன்ற விமானங்கள் முக்கிய நகரங்களுக்கு இணைக்கும் ஒரு சர்வதேச விமான நிலையமாகும். பாக்டோக்ராவிலிருந்து நாம்ச்சிக்கு  ரூ.3,000-5,000. வரை டிக்கெட் விலை இருக்கும். உங்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்த பாக்டோக்ராவிலிருந்து காங்டாக்கிற்கு ஹெலிகாப்டர் சேவையும் உள்ளது. இதில் உங்கள் பயண நேரம் 35 நிமிடங்கள்தான்.

 

இரயில் பயணிகளுக்கு..

நார்த் ஈஸ்ட் எக்ஸ்ப், டிபிஆர்டி ராஜ்தானி, ஏஜிடிஎல் சுந்தரி எக்ஸ்ப், மஹாநந்தா எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் சிக்கிம் செல்லலாம்.

நீங்கள் கார்கள் மற்றும் ஜீப்புகளை வாடகைக்கு எடுக்கலாம். மேலும் நாம்ச்சிக்கு காங்டாக், பெல்லிங், ஜோரேதாங், கலிம்போங் மற்றும் சிலிகுரிக்கு பேருந்து வசதியும் இருக்கிறது.

 

தங்குமிடம், உணவு வசதி:

நாம்ச்சி பகுதிகளைச் சுற்றி உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் தங்கும் ஹோட்டல்கள் உள்ளன. உணவு- நீங்கள் இங்கு மக்கள் அன்றாடம் உண்ணும் உணவை, நாம்ச்சியின் உணவு கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் சிறந்த உணவுகள் கிடைக்கும்.

ஹேப்பி ஹாலிடேஸ்!!!

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget