மேலும் அறிய

Healthy Lifestyle: உடல் எடையை எளிதாக குறைக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

Bedtime Rituals: உடல் எடையை குறைக்க தூங்க செல்வதற்கு முன் சிலவற்றை பின்பற்ற வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் எடையை குறைக்க பலவற்றை பின்பற்ற வேண்டியிருப்பது போல, இரவு நேரத்தில் சிலவற்றை கடைப்பிடித்தால் அது உடல் எடையை குறைக்கும் பயணத்திற்கு உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் எடையை நிர்வகிக்க,குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் சில உணவுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். அவற்றை பற்றி காணலாம்.

புரதம்:

நமது உடலில் உள்ள தசைகள், உறுப்புகள் மற்றும் தோல் உள்ளிட்ட திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு புரதச்சத்து அவசியம். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்கள் உடன் ஒப்பிடும்போது புரதச்சத்து செரிமானம் ஆக நேரம் எடுக்கும். இது உங்களுக்கு திருப்தி உணர்வைத் தரும்.  வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புரதம் திருப்தியை அதிகரிக்கும். இதனால் உடல் எடை சீராக இருக்க உதவும்.

நார்ச்சத்து:

செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். இது கலோரிகளைச் அதிகரிக்காமல் உடலுக்குச் சத்துக்களை வழங்குகிறது. கார்போஹைடெட் உறஞ்சப்படுவதை ஊக்குவிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர் ரோஹிணி தெரிவிக்கிறார். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். நார்ச்சத்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.

ஆரோக்கியமான கொழுப்பு:

கொழுப்பு உடலுக்கு தேவையில்லை என்ற கருத்து உண்மையில்லை. உடலின் இயக்கத்திற்கு கொழுப்பு அவசியம். எல்லா வயதினருக்கும் கொழுப்புச்சத்து தேவையில்லை என்று சொல்லிவிட முடியாது. நல்ல கொழுப்பு உடலுக்கு ஆரோக்கியமானதே. இதன் மூலம் உடலுக்கு சத்தி கிடைக்கும். சாப்பிட்டதும் உங்களுக்கு திருப்தி அளிக்கும். ஹார்மோன் உற்பத்தி ஆகியவற்றிற்கு உதவும். நல்ல கொழுப்பு உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

இவற்றுடன் இரவு தூக்க செல்வதற்கு முன்பு சிலவற்றை பின்பற்றலாம்.

புதினா டீ:

இரவு உணவு சாப்பிட்டதும் க்ரீன் டீ, பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் புதினா சேர்த்து டீ குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும் பணியை துரிதப்படுத்தும். டீ, காபி, பால் தூக்கம் வருவதை சிக்கல்படுத்தும். அப்படியிருக்க, புதினா, எலுமிச்சை, தேன் கலந்த டீ குடிப்பது வளர்சிதை மாற்றம் மேம்படும்.

இரவு நேர உணவு:

இரவு நேரத்தில் குறைந்த கலோரி உள்ள உணவுகளை சாப்பிடவும். அதிக அளவு உணவுகளை சாப்பிட வேண்டாம். இரவு உணவில் அதிக கொழுப்பு, எண்ணெய் நிறைந்து இருப்பதை தவிர்க்கவும். அதிக அளவு ப்ராசஸ்டு, இனிப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பாதிக்கும். இது உடல் எடை அதிகரிக்க உதவும். 

சரியா நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது:

இரவு உணவை 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடிப்பதைப் பழக்கமாக கொள்ளவும். இரவு 10 மணிக்கு மேல் உணவு சாப்பிடுவது தூக்கம் தடைப்படும்; உணவு செரிப்பதிலும் சிரமம் ஏற்படும். இரவு தூங்க செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பு உணவு சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆல்ஹகால் தவிர்க்கவும்:

இரவு நேரத்தில் ஆல்ஹகால் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உடல் எடையை அதிகரிக்க உதவும். 

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்:

இரவு நேரத்தில் பசி உணர்வு ஏற்பட்டால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் உணவுகளை தேர்வு செய்யவும். சிப்ஸ், இனிப்பு உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். மக்கானா, நிலக்கடலை, பாதாம், நட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
Nithyananda Alive: “ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
“ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
Chennai Weather: சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
Embed widget