பல் சொத்தை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது - நிபுணர் பரிந்துரை!
பற்களின் ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைப்பதை இங்கே காணலாம்.
உடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த நலனையும் உள்ளடக்கியது. குடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமே அதே அளவு வாய், பல் ஆரோக்கியமும் முக்கியன் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செரிமான மண்டலத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது பற்கள் மற்று வாய். பல் சொத்தை, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படுவதுண்டு. என்ன உணவு சாப்பிடுகிறோமோ அது மிகவும் முக்கியம். சர்க்கரை நிறைந்த உணவுகள், சோடா வகைகள் ஆகியவை பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதுவே பல் சொத்தையாவதற்கு வழிவகுக்கும். பற்களின் எனாமல் தேய்ந்திவிடும். பற்கள் ஆரோக்கியம் குறித்து பல் மருத்துவ நிபுணர் ரேஷ்மா ஷா தெரிவிக்கும் அறிவுரைகளை காணலாம்.
காலை, இரவு என இரண்டு வேளையும் பல் தேய்க்க வேண்டும் என்பதை பழக்கமாக்கவும். உணவு சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவு நேரத்தில் இனிப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். துரித உணவுகளை சாப்பிட வேண்டாம். அதோடு, நிபுணர்கள் பல் சோத்தை ஏற்படாமல் இருக்க சாப்பிட கூடாத உணவுகளாக சிவற்றை பரிந்துரைக்கின்றனர்.
பற்களில் எளிதாக ஒட்டும் உணவுகளை சாப்பிட வேண்டாம். சாக்லெட், மிட்டாய், கேரமல், கம்மிஸ் போன்ற வாயில் எளிதாக ஒட்டிக்கொள்ளும் உணவுகளை தவிர்க்கலாம். பல் தேய்க்கும்போது கூட இந்த வகையான இனிப்பு வகைகள் பற்களுக்கு இடுக்கில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பற்களுக்கு இடுக்கில் உணவு துகள்கள் ஒட்டினால் அதன்மூலம் பாக்டீரியாக்கள் வளர்ந்து அது பல் சோத்தை ஏற்பட காரணமாக அமையும்.
wafers, அப்பளம் ஆகிய பாகெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளும் ஆரோக்கியமானது அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பழ ஜூஸ்கள் ஆகியவற்றையும் தவிர்ப்பது பற்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது பற்களின் எனாமல் தேய வழிவகுக்கும்.
பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்:
- காலை, இரவு இரு வேளையும் fluoride நிறைந்த பேஸ்ட் பயன்படுத்தி பல் தேய்க்கவும்.
- பற்களுக்கு இடையில் உணவு துகள்கள் சேராமல் பார்த்துகொள்ள வேண்டும். உணவு, காபி, டீ என எது சாப்பிட்ட பிறகும் நன்றாக வாய் கொப்பளிக்கவும்.
- சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- பற்களின் ஆரோக்கியம் குறித்து தெரிந்துகொள்ள குறிப்பிட்ட கால இடைவேளையில் பல் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளவும்.