Ginger-Garlic Paste: இஞ்சி - பூண்டு விழுதை நீண்ட நாட்களுக்கு அரைத்து சேமித்து எப்படி? எளிய டிப்ஸ்..
இஞ்சி பூண்டு விழுதை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பார்க்கலாம்.
இஞ்சி-பூண்டு விழுது இந்திய சமையலில் முக்கிய பங்காற்றுகிறது. இது உணவுகளுக்கு சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்க உதவுகிறது. ஆனால் இந்த இஞ்சி-பூண்டு விழுதை தினசரி தயாரித்து பயன்படுத்துவது என்பது சற்று சிரமமான காரியம். குறிப்பாக பிஸியான நாட்களில் அல்லது எதிர்பாராத விருந்தினர்களின் வரும்போது உடனடியாக சமைக்க வேண்டிய கட்டாயத்தில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டு தயாராக இருந்தால் சமைப்பதற்கு ஈசியாக இருக்கும்.
காற்று புகாத பாட்டிலில் சேமிக்கவும்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் தோலுரித்து இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தனித்தனியாக அரைக்க வேண்டும். இஞ்சி பேஸ்டில் சிறிதளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை சேர்த்து, காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல், பூண்டு விழுதுடன் சிறிது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைச் சேர்த்து, அதை ஒரு தனி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இரண்டு பேஸ்ட்டுகளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும்போது அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு ஐஸ் ட்ரேயைப் பயன்படுத்தவும்
நான்கில் இருந்து ஐந்து மாதங்கள் வரை இஞ்சி, பூண்டு விழுது கெட்டுப்போகாமல் இருக்க, இஞ்சி-பூண்டை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை நன்றாக பேஸ்ட்டாக அரைத்து, ஒரு ஐஸ் ஸ்க்யூப் ட்ரேயில் சேர்த்து அவற்றை ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கியூப்களாக மாற்ற வேண்டும். பின் ஐஸ் ஸ்கியூப்களை எடுத்து பிளாஸ்டிக் ஜிப் பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சமைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இஞ்சி-பூண்டு பொடியை தயார் செய்யவும்
பூண்டை தோலுரித்து, பொடியாக அரைத்து, வெயிலில் காய விடவும். முற்றிலும் காய்ந்ததும் பொடி செய்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இதேபோல், இஞ்சியை தோல் நீக்கி துருவி, சில நாட்களுக்கு வெயிலில் உலர வைக்கவும். காய்ந்ததும் பொடியாக அரைத்து தனியாக சேமித்து வைக்கவும். சமைக்கும்போது, தேவையான அளவு இஞ்சி-பூண்டு பொடியை சேர்த்து அவற்றை பேஸ்ட்டாக மாற்றி அதை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இஞ்சி பூண்டு விழுதுகளை தயாரித்து பதப்படுத்தி வைத்துக் கொள்ள முடியும். இப்படி முன்கூட்டியே இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து சேமித்து வைப்பதன் மூலம் உடனடியாக அதை எடுத்து சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், தினசரி இஞ்சி-பூண்டு விழுது அரைப்பதற்கு செலவாகும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
மேலும் படிக்க
Vijay Makkal Iyakkam: யார் தப்பு செஞ்சாலும் அதிரடிதான்.. பரபர பனையூர் ஆலோசனை.. புஸ்ஸி ஆனந்த் பேட்டி