மேலும் அறிய

UPSC EPFO Recruitment 2023: யு.பி.எஸ்.சி. பணி; 577 பணியிடங்கள்; நாளை விண்ணப்பிக்க கடைசி!

UPSC EPFO Recruitment 2023 : பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் துணை ஆணையர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

“இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாக விண்ணப்பிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் வெப் போர்டல் முழுமையான திறனுடன் செயல்படுமா என்பது சந்தேகம் அதோடு, எல்லாரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சி செய்யும்போது சர்வர் ஸ்லோவாகும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச், 17,2023) கடைசி நாள். 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) காலியாக உள்ள 577 பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC) ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

பணி விவரம் :

Assistant Provident Fund Commissioner -418

 Enforcement Officer/Accounts Officer - 159

மொத்த பணியிடங்கள் - 577

கல்வித் தகுதி: 

இந்தப் பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு Level- 10 in the Pay Matrix as per 7th-CPC- படி மாத ஊதியம் வழங்கப்படும். 

பணியிடம்:

இந்தப் பணிக்கு தேர்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். 

PROBATION :

இரண்டு ஆண்டுகால புரோபேசன் காலத்திற்கு பிறகு பணி திறன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில்  அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு வழங்கப்படும். 

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்


UPSC EPFO Recruitment 2023: யு.பி.எஸ்.சி. பணி; 577 பணியிடங்கள்; நாளை விண்ணப்பிக்க கடைசி!இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியாக ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 

தேர்வு மையங்கள்:

தமிழ்நாட்டில் திருச்சி ,மதுரை, கோயம்புத்தூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு எழுதலாம். மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

விண்ணப்ப கட்டணம் 

இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும்.  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். யு.பி.ஐ., கிரெடிட் கார்ட், மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்தலாம். 

இரண்டு பணிகளுக்கும் விண்ணபிக்க விரும்புவோர் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், மகளிர் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php
என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.03.2023 

எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு யு.பி.எஸ்.சி.-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- விவரம் வெளியிடப்படும்.

ஊதிய விவரம், கல்வித் தகுதி உள்ளிட்டவைகள் குறித்த முழு விவரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget