CUB Recruitment:வங்கியில் வேலை வேண்டுமா? இதோ சிட்டி யூனியன் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
CUB Recruitment: சிட்டி யூனியன் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரம்.
சிட்டி யூனியன் வங்கியில் (city union bank) டிஜிட்டல் பேங்கிங்( Digital Banking), ஏ.டி.எம். கார்டு ஆப்ரேஷன் ( ATM Card Operations) , தகவல் சேகரிப்பு பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பிரிவு ( Data Warehouse / Information Security), IS Audit, Alternate Channels, உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cityunionbank.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு ஊதியம் தகுதி மற்றும் அனுபத்திற்கேற்ப வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Digital Banking, ATM Card Operations, Data Warehouse, Information Security, IS Audit, Alternate Channels, Data Centre operations, Network Security Operations உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் அந்தந்த பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, பட்டப்படிப்பு, M.Sc, MCA, M.Tech, உள்ளிட்ட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
Assistant General Managers (Scale V) - 40 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.
Chief Managers (Scale IV) - 35 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்,
Senior Managers / Managers / Deputy Managers / Assistant Managers - 25 வயது முதல் 40 வயது வரை
Senior Banking Manager / Banking Manager - 22 வயது முதல் 28 வயது வரை
விண்ணபிக்க கடைசி தேதி: 15.09.202
விண்ணப்ப படிவம்:
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணபிக்கவும். ஆன்லைனில் மட்டுமே இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
முழு அறிவிப்பின் விவரம் அறிய- https://www.cityunionbank.com/careers-eligible
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.cityunionbank.com/careers -ஐ தொடர்பு கொள்ளவும்.
மேலும் வாசிக்க:
BSF: எல்லை பாதுகாப்பு படையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம்