10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக computer operator and programming Assistant, Draughtsman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தினால் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம் தான் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்( NSDC). இதன் மூலம் மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன் பிறகு பயிற்சி பெறும் இளைஞர்கள் அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி தற்போது மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக உள்ள computer operator and programming Assistant, Draughtsman என 6 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
தமிழக மின்சார வாரிய பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 6
பணியிடம் - திருநெல்வேலி
கல்வித்தகுதி :
மின்சார வாரியப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24d5ceb150a26ed6f7be8 மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24e5e56921e79cc6b1078 என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.tneb.in என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்லவும்.
பின்னர் அதில் TNEB Tirunelveli Recruitment 2022 என்பதில் உள்ள விண்ணப்பத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
இதோடு இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம் :
தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 7500 முதல் அதிகபட்சமாக ரூ. 8050 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளியாகியுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.apprenticeshipindia.gov.in/ என்ற மத்திய அரசின் தேசிய ஊக்குவிப்பு பயிற்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.