Mega Job Fair: பிப். 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்; எங்கே நடைபெறுகிறது? முழு விவரம்!
Villupuram Mega Job Fair: விழுப்புரத்தில் பிப்ரவரி 16- தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் பிப்ரவரி, 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பயிற்சித்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முகவரி விவரம் இணைப்பு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/162502050035 - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த முகவரியின் QR -கோட் பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.
முகவரி:
Dr.M.G.R. GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN, ,
SALAMEDU, KANDAMANADI (P.O.),
VILLUPURAM - 605 401.
லேன்ட் மார்க் - VILLUPURAM TO TRICHY MAIN ROAD, THANTHAI PERIYAR NAGAR - QUARTERS(BUS STOP)
வேலைவாய்ப்பு முகாம் நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை..
முன்னணி நிறுவனங்கள்:
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Home/index - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://viluppuram.nic.in/ - வாயிலாக பதிவு செய்யலாம்.
ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு... 04146 - 226417 / 226417 / 223736
அலைபேசி எண் - 9442208674
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

