Job Alert: பெண்களே எழுதப் படிக்க தெரிந்தாலே போதும்! வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரம் இதோ!
Job Alert: திருவாரூரில் உள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை காணலாம்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படு வரும் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
வழக்கு பணியாளர் (Case Worker)
பல்நோக்கு பணியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பல்நோக்கு பணியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், சமையல் பணியில் முன் அனுபவம் வேண்டும். அரசு மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதி சான்று இருக்க வேண்டும்.
உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
வழக்கு பணியாளர் (Case Worker) - ரூ.15,000
பன்முக உதவியாளர் - ரூ.6,400/-
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சமூகநல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைப்பு கட்டிடம், தரைத்தளம்
திருவாளூர் - 613 004
விண்ணப்பிக்க கடைசி நாள் - 31-10-2023
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/10/2023100995.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் தகவல்களை அறியலாம்.
ஆல் தி பெஸ்ட்!