மேலும் அறிய

ஒரு டிகிரி இருக்கா? அப்போ உடனே இந்த செக் பண்ணுங்க.. தமிழக அரசு பணி விவரங்கள் உள்ளே..

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே இப்பணியில் சேரமுடியும்.

தமிழக சமூக பாதுகாப்புத்துறையில் காலியாக உள்ள 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் வருகின்ற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (District Child Protection Officer) பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 16

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1.07.2022 அன்றுக்குள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆனால் ஆட்டோமொபைல் இன்ஜினியர் பணியிடங்களுக்கு 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதே சமயம் SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://www.tnpsc.gov.in அல்லது http://tnpscexams.in/ என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி -ஏப்ரல் 30, 2022

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 150ம் , ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் இதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே இப்பணியில் சேரமுடியும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் - 19.06.2022

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : மாதந்தோறும் ரூ.56,100 – 2,05,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் :

விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 200ம், SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.tnpsc.gov.in/Document/english/2022_08_DCPO_eng.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget