Job Vaccancy: பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்… தமிழக அரசில் வேலை ரெடி!
தமிழ்நாடு மாநில வேளாண் வாரிய பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம், சிறப்பு முருங்கை ஏற்றுமதி வசதி மையத்தில், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீடு இயக்குனர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழக அரசின் அரசாணையின் படி, தமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியம் இயங்கிவருகிறது. இவ்வாரியத்தின் கீழ் சந்தைகள் மற்றும் சந்தைப் பகுதிகள் அபிவிருத்திக்கு சந்தை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் உட்பட சந்தைக் குழுக்களின் மற்றும் பிற விவகாரங்களுக்கான பணியின் ஒருங்கிணைப்பு, வேளாண் உற்பத்தி சந்தைகளின் வளர்ச்சியை மாநில அளவிலான திட்டமிடல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இதோடு இந்த சந்தை வாரியம் நிதி மற்றும் சந்தை மேம்பாட்டு நிதி நிர்வகிக்க மற்றும் சந்தைக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் கட்டுமானத் திட்டங்களின் மதிப்பீட்டில் சந்தைக் குழுக்களை மேற்பார்வையிடவும் வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. இவ்வாரியத்தின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரிய பணிக்கானத் தகுதிகள்:
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator)
காலியிடங்கள் - 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரரர்கள் B.Sc Agri with MBA படித்திருக்க வேண்டும். இதோடு 5 - 10 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் - 5
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.Sc Computer Science or BCA முடித்திருக்க வேண்டும். இதோடு 2 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் (Office Assitant) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் - 1
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், தங்களது சுய விபரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Executive Officer,
Tamilnadu State Agricultural Marketing Board,
CIPET road,
Thiru.Vi.Ka Industrial Estate,
Guindy,
Chennai – 32.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – மார்ச் 20, 2022
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://sites.google.com/site/agriculturalmarketingmis/about-us என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.