TNPSC Recruitment 2023: ரூ.2 லட்சம் வரை ஊதியம்; 369 பணியிடங்கள்; டி.என்.பி.எஸ்.சி. வேலை - முழு விவரம்
TNPSC Recruitment 2023:தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செயவதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
முதல்வர், தொழிற் பயிற்சி நிறுவனம் / உதவி இயக்குநர் (பயிற்சி)
உதவி பொறியாளர் (கட்டடவியல்)
உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை)
உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை)
உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்)
உதவி இயக்குநர் (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை)
உதவி பொறொயாளர் (தொழில் துறை)
உதவி பொறியாளர் (மின்னியல் பொதுப்பணித் துறை)
முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்)
உதவி பொறியாளர்
மேலாளர்
நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடம்
உதவி பொறியாளார் (கட்டடவியல்)
கல்வித் தகுதி
உதவி பொறியாளர் துறைக்கு சிவில், வேளாண்மை, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் ஆகிய துறைகளில் இளங்களை பொறியியல் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
தேர்வு செய்யும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் அல்லாத பதவிக்கு ஆனலைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்க தேர்வு செய்யப்படுவர்.
ஊதிய விவரம்
- முதல்வர், தொழிற் பயிற்சி நிறுவனம் / உதவி இயக்குநர் (பயிற்சி) - ரூ.56,100 -ரூ.2,05,700
- உதவி பொறியாளர் (கட்டடவியல்) - ரூ.37,000 - ரூ.1,38,500/-
- உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - ரூ.37,000 - ரூ.1,38,500/-
- உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) - ரூ.37,000 - ரூ.1,38,500/-
- உதவி பொறியாளர் (வேளாண்மை 0பொறியியல்) -ரூ.37,000 - ரூ.1,38,500/-
- உதவி இயக்குநர் (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) -ரூ.37,000 - ரூ.1,38,500/-
- உதவி பொறொயாளர் (தொழில் துறை) -ரூ.37,000 - ரூ.1,38,500/-
- உதவி பொறியாளர் (மின்னியல் பொதுப்பணித் துறை) -ரூ.37,700 - ரூ.1,38,500/-
- முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) - ரூ.56,100 - ரூ/1,77,500/-
- உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிகல்/எலக்ட்ரிக்கல்) - ரூ.39,800 - ரூ.1,26,500
- உதவி பொறியாளர் - ரூ.37,700 - ரூ.1,38,500/-
- மேலாளர் (சிவில்/பொறியியல்) - ரூ.37,700 - ரூ.1,19,500
நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடம்
உதவி பொறியாளார் (கட்டடவியல்) - ரூ.36,400 - ரூ.1,34,200/-
எழுத்துத் தேர்வு மையம்
ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு கட்டண்ம் - ரூ.200
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.11.2023
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 06.01.2023
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் காண https://tnpsc.gov.in/Document/tamil/23_2023_CESE_TAM.pdf- என்ற இணைப்பை காணவும்.
மேலும் வாசிக்க..