SSC Recruitment:பொறியியல் படிப்பு முடித்தவரா? எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க!
SSC Recruitment: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் ஜூனியர் பொறியாளர் பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே (18.04.2024) கடைசி நாள். இன்றிரவு 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
ஜூனியர் பொறியாளர்
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் உள்ள பணிக்கு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பின் மூலம் 968 பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளதாகவும், இருப்பினும், மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தேர்வாணையத்தின் முடிவே இறுதியானது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ₹ 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD), மற்றும் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுப்பவர்களுக்கு லெவல் -6ன் படி ரூ.35,400-1,12,400/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
தேர்வு செயல்முறையானது, இரண்டு தாள்களை உள்ளடக்கிய கணினி அடிப்படையிலான தேர்வை உள்ளடக்கியது (தாள் I மற்றும் தாள் II).
இரண்டு தாள்களும் குறிக்கோள் வகை, பல கேள்விகளை மட்டுமே கொண்டிருக்கும்.
இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வினாத்தாள் இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டது.
தாள்-I ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்களை எதிர்மறையாகக் குறிக்கும், அதே நேரத்தில் தாள்-II ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு 1 மதிப்பெண்களைக் எதிர்மறையாகக் குறிக்கும் .
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 30 வரை இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழு விவரம் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_28032024.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்கை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_28032024.pdf- க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். - SSC Junior Engineer Recruitment, Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.04.2024 23:00 மணி வரை