மேலும் அறிய

தமிழ்நாட்டில் 2,860 அப்ரெண்டிஸ் இடங்கள்: விண்ணப்பிக்க தெற்கு ரயில்வே அழைப்பு..

Southern Railway Recruitment: மாத உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் (Southern Railway) கோயம்புத்தூர், பெரம்பூர், திருவனந்தபுரம், பாலகாடு, சேலம், அரக்கோணம், ஆவடி,தாம்பரம், ராயபுரம் சென்னை, பொன்மலை, மதுரை,  ஆகிய கோட்டங்களில் ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship)  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பணி விவரம்

Trade Apprentice 

மொத்த பணியிடங்கள் - 2860

கல்வித் தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி காலம்

  • ஃபிட்டர்: ஓராண்டு காலம்
  •  வெல்டர் மற்றும் எலக்ட்ரிக் - ஓராண்டு மற்றும் மூன்று மாதங்கள்
  • ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் - ஓராண்டு மூன்று மாதங்கள்

வயதுவரம்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவர்களாவும்  முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உதவித் தொகை

பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்தத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியிலன பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண்ணை வழங்குமாறும், இ-மெயில் எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாக www.sr.indianrailways.gov.in -என்ற லிங்கில் கூடுதல் விவரங்களை பெறலாம். இந்தப் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.02.2024

Scouts & Guides பிரிவி இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு 

தெற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, பாலக்காடு, திருவனந்ததபுரம், சேலம் உள்ளிட்ட  ரயில்வே கோட்டங்களில் உள்ள அலுவலகங்களில்  Scouts & Guides இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.Southern Railway: தெற்கு ரயில்வேயில் வேலை; 10,12-வது, ஐ.டி.ஐ. தேர்ச்சி போதும் - விண்ணப்பிப்பது எப்படி? மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget