10,+2 தேர்ச்சியா? மத்திய அரசில் வேலை! விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!
சிம்கோ நிறுவனப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் எனப்படும் சிம்கோவில் அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன் என 48 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் சிம்கோ நிறுவனத்தில் (South India Multi-State Agriculture Co-Operative Society Limited (SIMCO)) அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட் மற்றும் கிளை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
மத்திய சிம்கோ நிறுவனத்தில் காலிப்பணியிட விபரங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 48
துறைவாரியாக காலிப்பணியிட விபரங்கள்:
அலுவலக உதவியாளர் – 10
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூ. 5,200 முதல் 20,200
சேல்ஸ்மேன் – 22
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் 10, +2 மற்றும் ஐடிஐ தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூபாய் 6,200 முதல் 26,200 என நிர்ணயம்.
சூப்பர் வைசர்கள் – 8
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூபாய் 6,200 முதல் ரூபாய் 28,200 என நிர்ணயம்.
அக்கவுன்டன்ட் – 4
கல்வித்தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட முறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் -ரூபாய் 7,200 முதல் 30,200 என நிர்ணயம்.
கிளை மேலாளர் -4
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூபாய் 8200 முதல் 32,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் http://simcoagri.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.
இதன் பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து அஞ்சல் வாயிலாக வருகின்ற நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
South India Multi- state Agriculture co- operative society limited,
Head office,
Town Hall campus,
Near old bus stand,
Vellore – 632004.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.