SBI SCO Recruitment 2022 : வங்கியில் வேலை வேண்டுமா? எஸ்.பி.ஐ.-இன் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? கூடுதல் விவரம்!
SBI SCO Recruitment 2022 : நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது
நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது . துணை மேலாளர் மற்றும் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆகிய பணியிடங்கள் SPECIALIST CADRE OFFICER என்ற பிரிவின் கீழ் நிரப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் துணை மேலாளர் பணி நிரந்த பணி என்றும், சீனியர் எக்ஸிக்யூடிவ் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு வரும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- துணை மேலாளர் (Database Administrator)
- துணை மேலாளர்(Infrastructure Engineer)
- துணை மேலாளர்(Java Developer)
- துணை மேலாளர்(WAS Administrator)
- Senior Executive (Frontend Angular Developer)
- Senior Executive (PL & SQL Developer)
- Senior Executive (Java Developer)
- Senior Executive (Technical Support)
- Executive (Technical Support)
- Senior Special Executive (Technology Architect)
பணி இடம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
துணை மேலாளர் பணிக்கு இளங்கலை பொறியியல் அல்லது பி.டெக் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இளங்களை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். பணியிடத்திற்கு ஏற்ற கோடிங் சாப்ட்ஃவேர் பற்றிய புரிதல் வேண்டும்.
சீனியர் எக்ஸிகியூடிவ் பணிடத்திற்கும் இளங்கலை பொறியியல் படித்திருக்க வேண்டும். அதோடு, Oracle Database PL ,SQL Developer ஆகிய பணியிடத்திற்கு தகுதியான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்ட்டியது அவசியம்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
துணை மேலாளர் பணியிடங்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.48,170 வழங்கப்படும். மேலும், எஸ்.பி.ஐ.-இன் ஊதிய வரையறை பின்பற்றப்படும்.
சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பணியிடத்திற்கு ஆண்டு வருமானமாக 24 லட்சம் வரை வழங்கப்படும்.
பணி காலம்:
சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு மூன்றாண்டுகள் ஒப்பந்த காலம். திறன் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்து கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
நிரந்த பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
கவனிக்க:
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 2023 ஜனவர் அல்லது பிப்ரவர் மாதம்
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2022/12/09133523/08122022_GITC-Ad-No.CRPD-SCO-2022-23-24.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.