மேலும் அறிய
Advertisement
SBI Recruitment 2023: வங்கி வேலை வேண்டுமா? மாத சம்பளம் ரூ.80 ஆயிரம்; விண்ணப்பிப்பது எப்படி?
SBI Recruitment 2023: பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.
நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Assistant General Manager' மற்றும் ‘”Chief Manager’ ஆகிய பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்:
- உதவிப் பொது மேலாளர்
- தலைமை மேலாளர்
- புராஜெக்ட் மேலாளர்
- மேலாளர்
டெக் ஆர்கிடெக், இன்ஃப்ரா க்ளவுட் ஸ்பெசலிஸ்ட், எஸ்.ஐ.டில் டெஸ்ட் லீட், பர்ஃபாமன்ஸ் டெஸ்ட் லீட், ஆட்டோமேசன் டெஸ்ட் லீட், டெடிங் அண்லிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மொத்த பணியிடங்கள் - 47
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க பி.டெக், பொறியியல் படிப்புகளில் ஏதேனும் ஒரு பிரிவில் படித்திருக்க வேண்டும்.
ஐ.டி. துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள இதற்கு தொழில்நுட்ப பிரிவிற்கான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
ஜாவா, க்ள்வுட் சொல்யூசன் ஆர்கிடெக்சர் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
AWS Certified Solutions Architect படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி இடம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 31.012023-இன் படி 35 மிகாமல் இருக்க வேண்டும். பணி கான்ட்ரான்ட் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
உதவிப் பொது மேலாளர் -Rs. 89890-2500/2-94890-2730/2-100350
தலைமை மேலாளர் - Rs. 76010-2220/4-84890-2500/2-89890
புராஜெக்ட் மேலாளர் - Rs. 76010-2220/4-84890-2500/2-89890
மேலாளர் -Rs. 76010-2220/4-84890-2500/2-89890
விண்ணப்பிப்பது எப்படி?
https://bank.sbi/careers - அல்லது https://www.sbi.co.in/web/careers - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
நிரந்த பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும்.
நேர்காணலுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி காலம்:
இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க:
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/- என்ற இணைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2023
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://sbi.co.in/documents/77530/36548767/150523-ADV_CRPD_SCO_2023_24_07.pdf/5a021a12-c18e-ef29-1ce2-08bfe7b90c74?t=1684154986823- என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion