மேலும் அறிய
Advertisement
SSB Recruitment: 12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.. மத்திய அரசில் வேலை..! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
SSB Recruitment: சாஷ்த்ரா சீமா பால் துறையில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘Sashastra Seema Bal’ என்ற அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு படையில் பல்வேஉ பிரிவுகளில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
கான்ஸ்டபிள் (Carpenter)
கான்ஸ்டபிள் (Blacksmith)
கான்ஸ்டபிள் (Driver)
கான்ஸ்டபிள் (Tailor)
கான்ஸ்டபிள் (Gardener)
கான்ஸ்டபிள் (Cobbler)
கான்ஸ்டபிள் (Painter)
கான்ஸ்டபிள் (Washerman) Male only
கான்ஸ்டபிள் (Barber) Male only
கான்ஸ்டபிள் (Cook) Male
கான்ஸ்டபிள் (Cook) Female
கான்ஸ்டபிள் (Water Carrier) Male
மொத்த பணியிடங்கள் - 543
கல்வி மற்றும் பிற அடிப்படை தகுதிகள்:
- இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மெக்கானிக் பணிக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- இரண்டு ஆண்டுகள் குறைந்தபட்சம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை?
உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test, Physical Standard Test (PST)), எழுத்துத் தேர்வு, திறனறவுத் தேர்வு/ ட்ரேட் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவ அலுவலார்கள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
http://www.ssbrectt.gov.in/ - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.06.2023
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களை http://www.ssbrectt.gov.in/ - என்ற லின்கை க்ளிக் செய்து காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion