Job Alert : +2 தேர்ச்சி போதும்; ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்; பிரபல கல்லூரியில் வேலை; முழு விவரம்!
Job Alert : சாரதா மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சாரதா மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Lab Assistant, Office Assistant, Cleaner, உள்ளிட்ட பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு வரும் 31- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- நூலக உதவியார்
- ஆய்வக உதவியாளர்
- அலிவலக உதவியாளர்
- பெருக்குபவர்
- துப்புரவாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டாதாரிகள், முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அலுவலக உதவியாளர், பெருக்குபவர், துப்புரவாளர் பணிக்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
நூலக உதவியார் - 37 வயது வரை
ஆய்வக உதவியாளர் - 55 வயது வரை
அலுவலக உதவியாளர் - 55 வயது வரை
பெருக்குபவர் - 37 வயது வரம்பு
துப்புரவாளர் - 32 வயது வரை
வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் தெரிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
- நூலக உதவியார் -ரூ.15900-50400/-
- ஆய்வக உதவியாளர் - ரூ.19500-62000/-
- அலிவலக உதவியாளர் - ரூ.15700-50000/-
- பெருக்குபவர் - ரூ.15700-50000/-
- துப்புரவாளர் ரூ.15700-50000/-
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.srisaradacollege.ac.in - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி
பேர்லேண்ட்ஸ், சேகம்- 636016
பணியிட எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விவரத்திற்கு https://drive.google.com/file/d/1D2on8PUi9RsIq-MGXCBF1KrO4Hg9VA-Q/view
- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Job Alert : மாதம் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் ; நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி; விவரம் இதோ!