Tiruchendur Murugan Temple job: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை..இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தாளம், தவில் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி: தவில், தாளம், சுருதி, அர்ச்சகர் உதவியாளர், நாதஸ்வரம்
கல்வித்தகுதி:
1.தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்;
2.மத நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படும் இசைப் பள்ளியில், தொடர்புடைய துறையில் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு - 18 வயது முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்தல் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: நேரடியாக அல்லது அஞ்சள் வழியாக
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-27 , 2023
நிபந்தனை:
- இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
- தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் தகுதியற்றவர்கள்
- ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
- விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் கிடையாது
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
திருச்செந்தூர்,
தூத்துக்குடி,
தொலைபேசி: 04639 - 242221
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்
- பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும். Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271].,Senthilambathy, Thirucheeralaivai,Senthilandavar, Kadarkarai aandi (tn.gov.in)





















