இந்திய கடற்படையில் மாலுமியாக ஆசையா? . விருப்பமுள்ளவர்கள் நவ.2க்குள் விண்ணப்பிக்கவும்!
தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள sailor எனப்படும் மாலுமிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
நாட்டின் கடல் எல்லைகளைக் காப்பது தான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்திய அரசு தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. குறிப்பாக ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப்பார்வையிடுதல். பேரிடர் நிவாரணம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது கடற்படையில் 300 மாலுமி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கான வேறு என்ன தகுதிகள்? உள்ளது என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..
இந்திய கடற்படையில் மாலுமிகளுக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கல்வி வாரியங்களில் இருந்து மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையாக படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய கடற்படையில் மாலுமிகள் பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில், இந்திய கடற்படையின் https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு குறித்த விபரங்களை அறிந்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது உங்களின் செயலில் உள்ள இமெயில் முகவரி, தொலைபேசி எண்ணை சரியாக குறிப்பிடவும். ஏனெனில் தேர்வின் அழைப்பு சரியாக பெற முடியும்.
பதிவு செய்த இமெயில் முகவரியின் மூலம் இணையதளத்தில் சென்று “Current Opportunities” என்பதற்குள் நுழைந்து விண்ணப்பிக்கவும்.
இதோடு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து பின் இதனை வருகின்ற வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
Sailor (MR) April 2022 Batch அதாவது இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறும் நபர்கள் இந்திய கடற்படையில் மாலுமிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மேற்கண்ட தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்திய கடற்படையில் சேர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1MoHy_s_L5dA_vC2E3GqprKtDwM5ySD-T/view என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
.