மேலும் அறிய

RRC WR Apprentice: ரயில்வேயில் தொழில்பழகுநர் வாய்ப்பு- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?விவரம்!

RRC WR Apprentice: மாத உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் (Southern Railway)  பாலக்காடு, சேலம், அரக்கோணம், ஆவடி,தாம்பரம், ராயபுரம் சென்னை, பொன்மலை, மதுரை, கோயம்புத்தூர், பெரம்பூர், திருவனந்தபுரம்  ஆகிய கோட்டங்களில் ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship)  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பணி விவரம்

Trade Apprentice 

மொத்த பணியிடங்கள் - 2860

கல்வித் தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி காலம்

  • ஃபிட்டர்: ஓராண்டு காலம்
  •  வெல்டர் மற்றும் எலக்ட்ரிக் - ஓராண்டு மற்றும் மூன்று மாதங்கள்
  • ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் - ஓராண்டு மூன்று மாதங்கள்

வயதுவரம்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவர்களாவும்  முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவித் தொகை

பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்

இந்தத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியிலன பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

கவனிக்க..

  • விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண்ணை வழங்குமாறும், இ-மெயில் எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாக www.sr.indianrailways.gov.in -என்ற லிங்கில் கூடுதல் விவரங்களை பெறலாம். இந்தப் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  • பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2024

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ( Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research- Jipmer ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator Grade I)

கல்வித் தகுதி:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15000/ ஒரு மணி நேரம் கம்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசு சாரா அலுவலகங்களில் EDP பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 30 வயது பூர்த்தி அடந்தவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும். 

தெரிவு செய்யும் முறை:

இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEAMQVrm5rTV2N_giLQkeQurp9b3wwIUeiB0YL_dyYuKsTXA/viewform - என்ற இணைப்பை க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள - jipmerdiamonds@gmail.com 

இந்த வேலைவாய்ப்பு குறித்து மேலதிக தகவல்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notification%202%20-%20JIPMER%20DIAMONDS%20DEO.pdf - என்ற இணைப்பி க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.02.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Embed widget