RRB Notification 2024: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; 3,445 பணியிடங்கள்- மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
RRB Recruitment 2024 Notification: சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை 194 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் டைப்பிஸ்ட், கிளர்க் உள்ளிட்ட பல்வேறு வகையான 3,445 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வணிகம் மற்றும் டிக்கெட் எழுத்தர் பணிக்கு 2022 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கணக்கு எழுத்தர் - தட்டச்சர் பணிக்கு 361 பணியிடங்களும் இளநிலை எழுத்தர் - தட்டச்சர் பணிக்கு 990 பணியிடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ரயில் எழுத்தர் பணிக்கு 72 இடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை 194 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது விவரம்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் 18 முதல் 33 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் சாதி வாரியாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
- வணிகம் – டிக்கெட் எழுத்தர் – ரூ.21700/- (நிலை – 3)
- கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - ரூ. 19900/- (நிலை – 2)
- இளநிலை எழுத்தர் - தட்டச்சர் - ரூ. 19900/- (நிலை – 2)
- ரயில் எழுத்தர் - ரூ.19900/- (நிலை - 2)
தேர்வு முறை
* முதல் நிலை கணினி வழியிலான தேர்வு (CBT)
* இரண்டாம் நிலை கணினி வழியிலான தேர்வு (CBT)
* தட்டச்சுத் திறன் தேர்வு/ கணினி அடிப்படையிலான திறனாய்வுத் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ தகுதித் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அதில், https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற இணைப்பை சொடுக்கலாம்.
அதில் Apply என வலது மேல் ஓரத்தில் இருக்கும் எழுத்தைத் தேர்வு செய்யவும்.
தொடர்ந்து, https://www.rrbapply.gov.in/#/auth/home?flag=true என்ற பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_06-2024_NTPC_UnderGraduate_a11y.pdf என்ற அறிவிக்கையை முழுமையாகக் காணலாம்.
தொலைபேசி எண்: 9592-001-188, 0172-565-3333 (10:00 AM to 5:00 PM)
இ- மெயில் முகவரி: help@csc.gov.inhelp@csc.gov.in