RRB Junior Engineer Recruitment 2024: இந்திய ரயில்வேயில் வேலை- 7951 பணியிடங்கள்; செப்.8 வரை அவகாசம்- ஆர்ஆர்பி அறிவிப்பு
RRB Junior Engineer Recruitment 2024: ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றி விவரங்களை இங்கே காணலாம்.
இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், விண்ணப்ப படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால், இன்று (30.08.2024) முதல் மேற்கொள்ளலாம்.
ஆர்.ஆர்.பி. வேலைவாய்ப்பு:
ஜூனியர் பொறியாளட்ர், Depot Material Superientendent, Chemical & Metallaurgical Assistant, Chemical Supervisor and Metallurgical Supervisor உள்ளிட்ட பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் மொத்தம் 7951 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 652 காலியிடங்கள் உள்ளன.
இந்த வேலைவாய்ப்பிற்கு சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாத ஊதியமாக ரூ. 35,400 – 44,900 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலை கணினி வழித் தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானர் தேர்ந்த்டுக்கப்படுவர்.
https://www.rrbchennai.gov.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து இன்று முதல் செப், 8-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.