TN govt: வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் காலி இடங்கள்; உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தமிழக அரசின் வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்குக் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளரே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
காலி இடங்களை உடனே நிரப்புக
அந்த கடிதத்தில், பணியமைப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடக் கோருதல் தொடர்பாக கூறப்பட்டு உள்ளது.
குறிப்பாக வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும், இதுவரை அந்த காலிப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனவே, மேற்காணும் காலிப் பணியிடங்களை நிரப்பிட, மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






















