பொறியியல் படித்தவர்களா நீங்க..? செம வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்து இருக்குங்க!!!
இஸ்ரோவின் கீழ் செயல்படும் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது பொறியியல் படித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் முடித்தவர்களா நீங்கள்... என்னங்க நீங்க இன்னும் விண்ணப்பம் அனுப்பலையா... இஸ்ரோவில் தேர்வில்லாத வேலை காத்திருக்குங்க. பொறியியல் படித்தவர்களுக்கு ரூ56,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்க.
இஸ்ரோவின் கீழ் செயல்படும் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் படித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி, திட்ட அசோசியேட் ஆகிய பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் ஆய்வு மையங்களில் விண்வெளி பயன்பாட்டு மையம் (Space Applications Centre) முக்கிய பங்கு பெற்றுள்ளது. பல்துறைகளில் திட்ட ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். மொத்தம் 13 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திட்ட விஞ்ஞானி - I 1
திட்ட ஆசோசியேட் - I 12
என மொத்தம் 13 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 11.09.2025 தேதியின்படி, 35 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள் தளர்வு உள்ளது.
திட்ட விஞ்ஞானி - I பதவிக்கு வேளாண் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேளாண் பொறியியல்/ வேளாண்மை தகவல் தொழில்நுப்டம் ஆகியவற்றில் M.E/ M.Tech முடித்திருக்க வேண்டும். மேலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மற்றும் Remote Sensing, GIS அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
திட்ட அசோசியேட் - I பதவி பல்துறைகளில் நிரப்பப்படுகிறது. Geo-informatics/ Remote Sensing / GIS ஆகியவற்றில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது வேளாண் தகவல் தொழில்நுட்பம், Geo-informatics, வேளாண் பொறியியல் ஆகியவற்றில் B. Tech டிகிரி 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் 7 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கணினி அறிவியல்/ டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் B. Tech முடித்தவர்கள் 1 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வேளாண் அறிவியலில் 65 சதவீத மதிப்பெண்களுடன் M. Sc முடித்தவர்கள் 4 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
திட்ட விஞ்ஞானி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,000 மற்றும் HRA வழங்கப்படும். திட்ட அசோசியேட் பதவிக்கு மாதம் ரூ.31,000 மற்றும் HRA வழங்கப்படும்.
இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்து தனியாக தகவல் பகிரப்படாது. இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்படும். இப்பதவிகள் தற்காலிகமானவை ஆகும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://careers.sac.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்களின் வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி செப்டம்பர் 22-ம் தேதியுடன் இருக்க வேண்டும். அதுவரை இறுதி முடிவு பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதி கிடையாது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. அப்புறம் ஏன் காலதாமதம் இன்றே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தொடர்ந்து இதற்கான விவரங்களை இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் 079 2691 5512 / 10 என்ற எண்ணிற்கு மற்றும் சந்தேகங்களுக்கு 079 2691 3025 / 22 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம். ao_rr@sac.isro.gov.in என்ற இமெயில் முகவரியிலும் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.






















