Recruitment 2022: இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காத்திருக்கும் வேலை
காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காவலர் மற்றும் பல்நோக்கு பணியாளர், விலங்கு பராமரிப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 11 பல்நோக்கு பணியாளர், 9 ஆய்வக உதவியாளர், இரண்டு காவலர், இரண்டு விலங்கு காப்பாளர் என மொத்தம் 24 பணியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சட்ட மாணவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு வந்திருக்கு.. LLB படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதும், அதிகப்பட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 34, பட்டியலின பிரிவினருக்கு 37 ஆகவும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பல்நோக்கு பணியாளருக்கு ரூ.20 ஆயிரமும், ஆய்வக உதவியாளருக்கு ரூ.12 ஆயிரமும், காவலர், விலங்கு காப்பாளர் பணிக்கு ரூ.8 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
College Admission: அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27 முதல் விண்ணப்பிக்கலாம்: ஜூலை 15 கடைசி தேதி
மேற்காணும் பணிகளுக்கு கல்வித் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பெயர், பிறந்த தேதி, வயது, விலாசம், ஆதார் எண், கைபேசி எண்ணை பூர்த்தி செய்து, கல்வி, சாதி சான்றிதழ், முன் அனுபவம் இருப்பின் அதன் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சுய முகவரி அடங்கிய உறையுடன் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்திலுள்ள “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/இயக்குநர், சென்னை – 600106” ஆகிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஜூன் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்பதால் காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 - 2957 0726 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்