வேலை இல்லை என்ற கவலையை விடுங்க...! 500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு - இதோ முழு விபரம்...!
மயிலாடுதுறையில் வேலையற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 25 -ம் தேதி நடைபெறுகிறது.

மயிலாடுதுறையில் வேலையற்ற இளைஞர்களுக்கான ஏப்ரல் 25 -ம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 500 -க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்காக சிறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், யூனியன் கிளப் மயிலாடுதுறை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை மிட்டவுன் ஆகிய அமைப்புகள் இணைந்து, வரும் 25 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
முகாமின் இடம் மற்றும் நேரம்
வேலைவாய்ப்பு முகாம், மயிலாடுதுறையின் முக்கியமான இடமான கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் மயிலாடுதுறை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள்
மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்கின்றன. இவை தங்களின் நிறுவனங்களுக்கான 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் வேலைவாய்ப்பு தேடுபவர்களை நேரில் தேர்வுசெய்ய உள்ளன.
பங்கேற்பதற்கான தகுதிகள்
18 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியறிவு உடையவர்கள்.ன, டிப்ளமோ, ஐ.டி.ஐ, இன்ஜினியரிங் மற்றும் பிற பட்டதாரிகளும் தங்களுக்கேற்று வேலைவாய்ப்புகளை இங்கு பெறலாம்.
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
வழிகாட்டுதல்களும் பயிற்சிகளும்
வேலைவாய்ப்பு வாய்ப்புகளோடு சேர்ந்து, இம்முகாமில் பங்கேற்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், சுயதொழில் தொடக்கத்திற்கான வங்கி கடன்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
பங்கேற்பதற்கான தேவையான ஆவணங்கள்
வேலைநாடுநர்கள் சுயவிவர அறிக்கை ( Resume ) கல்விச்சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
முன்பதிவு மற்றும் தொடர்பு விபரங்கள்
பங்கேற்பதற்குத் தேவையான முன்பதிவு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் செய்யலாம். மேலும் தகவல்களுக்கு 04364-299790 அல்லது 94990-55904 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
நிறுவனங்களுக்கான அழைப்பு
மயிலாடுதுறையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இம்முகாமில் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நேரில் தேர்வு செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கூறுகையில்; “இம்முகாம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி வாழ்க்கையை முன்னேற்றும் ஒரு அரிய வாய்ப்பாக அமையும். அனைவரும் இதில் பங்கேற்று முழு பயனடைய வேண்டும்” என்றார்.

