BECIL Job : 22 ஆயிரம் வரை மாத ஊதியம்; மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; விவரத்திற்கு இதைப் படிங்க!
BECIL Job: பவான் ஹான்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் நொய்டாவை தலமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பவான் ஹான்ஸ் நிறுவனத்தில் (Pawan Hans Limited) காலியாக உள்ள எலக்ட்ரிசியன், ஸ்டேசன் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) வெளியிட்டுள்ள அறிவிப்பில் Maintenance Supervisor, Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station Co-ordinator, RCS Co-didinator உள்ளிட்ட பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம் :
Maintenance Supervisor (Skilled) -5
Operation Assistant (Skilled) - 5
Duty Electrician/operator Semi Skilled - 5
Station Co-ordinator (Skilled)- 5
RCS Co-ordinator (Skilled) -1
கல்வித்தகுதி:
Maintenance Supervisor பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்றாண்டுகள் பணிக்கு தொடர்பான துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Operation Assistant பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்றாண்டுகள் Helliport /Airport, liasoning & co-ordination, and handling of passengers ஆகிய பிரிவுகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Duty Electrician/ operator பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலெக்ட்ரிசியன் படிப்பில் இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மூன்றாடுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Station Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
RCS Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Maintenance Supervisor, உதவியாளர், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Station Co-ordinator,RCS Co-ordinator ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை?
விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் நேர்காணலுக்கான அழைக்கப்படும்.
ஊதிய விவரம்:
மாத ஊதியமாக ரூ. 17,446 முதல் ரூ. 22,516 வரை வழங்கப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தளம்- https://www.becil.com/careers
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.11.2022.
அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள https://www.becil.com/uploads/vacancy/215PHL31oct22pdf-83808fbcccb9e85e5033c68a77dd1fa1.pdf
என்ற லிங்கில் காணலாம்.