மேலும் அறிய

Job Alert: சட்டம் பயின்றவரா? ரூ.30,000 மாத ஊதியம்; பெண்கள் உதவி மையத்தில் வேலை - விவரம்!

Job Alert: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தகவல்களை இங்கே காணலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre)  உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவாட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  • மைய நிர்வாகி (Centre Administrator) 
  • மூத்த ஆலோசகர் (Senior Counsellor)
  • கணினி நிர்வாகி (IT Staff) 
  • வழக்கு பணியாளர்  (Case Worker)
  • உதவியாளர்
  • பாதுகாப்பாளர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • மைய நிர்வாகி பணிக்கு சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • வழக்கு பணியாளர், முதுநிலை ஆலோசகர்  பணிகளுக்கு சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.
  • கணினி நிர்வாகி பணிக்கு கணினி அறிவியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • பல்நோக்கு பணியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், சமையல் பணியில் முன் அனுபவம் வேண்டும். அரசு மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதி சான்று இருக்க வேண்டும்.
  • உள்ளூரில் வசிப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர் பணிக்கு பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கணினி நிர்வாகி, உதவியாளர், பாதுகாப்பாளர் ஆகிய பணிகளுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் உள்ளூரில் வசிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு விவரம்

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • மைய நிர்வாகி - ரூ/30,000/-
  • முதுநிலை ஆலோசகர் - ரூ.20,000/-
  • கணினி நிர்வாகி - ரூ.18,000/-
  • வழக்கு பணியாளர்  (Case Worker) - ரூ.15,000/-
  • உதவியாளர் -ரூ.6,400/-
  • பாதுகாப்பாளர்  - ரூ.10,000/-

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

சமூக நல அலுவலர்

மாவாட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,2-வது தளம்

திருவள்ளூர் மாவட்டம் - 602 001 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 04.12.2023

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111079.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
KPK Jayakumar Death: ஜெயக்குமார் சடலம் இருந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்! விலகுமா மர்மம்?
KPK Jayakumar Death: ஜெயக்குமார் சடலம் இருந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்! விலகுமா மர்மம்?
இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
G V Prakash - Saindhavi: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?
G V Prakash - Saindhavi: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?
Embed widget