முதுகலை பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. உயர்கல்வித்துறையில் 2207 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க..
கணினிவழி எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாதம் ரூபாய் 36,900 – 1,116,600 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு தமிழ் – 271, ஆங்கிலம் – 192, கணிதவியல் – 114, இயற்பியல் – 97, வேதியியல் – 191,விலங்கியல் – 109,தாவரவியல் – 92, பொருளாதாரவியல் – 289, வணிகவியல் – 313, வரலாறு – 115, புவியியல் – 12,அரசியல் அறிவியல் – 14, வீட்டு அறிவியல் – 3, இந்திய கலாச்சாரம் – 3, உயிர் வேதியியல் -1, உடற்கல்வி இயக்குநர் ( நிலை1) – 39, கணினி பயிற்றுவிப்பாளர் – 44 என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு என்னென்ன தகுதிகள்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தேர்வு முறை? என்ன என்பது குறித்து இங்கே விரிவாகத்தெரிந்துக்கொள்வோம்.
கல்வித்தகுதி : ஆசிரியர் தேர்வு வாரிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்விற்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். அதாவது தமிழ் , ஆங்கிலம், வரலாறு – 15, புவியியல், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : ஜூலை 2021 முதல் 40 வயதினைக்கடந்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும், ஆனால் இடஓதுக்கீடு பிரிவினருக்கு கூடுதலாக தளர்வுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.trb.nic.in என்ற ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 16 ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கவுள்ள நிலையில், கடைசி தேதி அக்டோபர் 17 என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ரூ. 500 மற்றும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆன்லைன் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்
தேர்வு முறை : மொத்தம் 150 மதிப்பெண்களுக்காக 3 மணி நேரம் இத்தேர்வானது நடைபெறும். கணினி எழுத்துத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் தகுதிபெற்றவர் ஆவார்கள். எஸ்சி மற்றும் எஸ்சிஏ பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அரசு விதிகளின் படி பின்பற்றப்படும். தமிழ்வழிக்கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கணினி எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி : நவம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கணினிவழி எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 36,900 – 1,116,600 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.