மேலும் அறிய

NIT Job: பி.இ. படித்தவரா? திருச்சி என்.ஐ.டி.-யில் வேலை; மாதம் ரூ.30,000 ஊதியம் - முழு விவரம்

NIT Job:தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

திட்ட உதவியாளார் (Project Associate)

'MEMS for electrical machines and drive' என்ற திட்டத்தில் பணியாற்ற வேண்டும்.

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கான கல்வித் தகுதியினை இளங்கலை பொறியியல், (EEE/ ECE/ E&I/ CSE) முதுகலை பொறியியல் /  M.Tech. (Power
Electronics/ Applied Electronics/ VLSI/ Embedded Systems/ CSE/ Power Systems/ Instrumentation Engg) படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வரம்பில் அரசின் விதிகள்ளின்படி தளர்வு அளிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: 

இமெயில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் உறையில்  “Project Associate – ES – NaMPET-III” என்று குறிப்பிட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இதற்கு எழுத்துத் தேர்வு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.

அஞ்சல் முகவரி:

Dr.S.Moorthi,

Associate Professor/EEE,

National Institute of Technology

Tiruchirappalli-620015,

பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்  - https://www.nitt.edu/home/other/jobs/EEE-Project-Associate-AUG2023.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.09.2023

இ-மெயில் முகவரி - jrf.nampet3@gmail.com

***

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ( Tamil Nadu Veterinary and animal Sciences university ) கீழ் செயல்படும் 
'Madras Veterinary கல்லூரியில் உள்ள திட்ட உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'Madras Veterinary College' கால்நடை பயோடெக்னாலஜி துறையில் "Surveillance, Molecular characterization and development of vaccine candidate for Porcine Parvovirus" என்ற திட்டத்தில் உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்கள் இதன் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி விவரம்: 

திட்ட உதவியாளர்

பணியிடம் : சென்னை

கல்வித் தகுதி: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கால்நடை அறிவியல் / பி.டெக்., பி.எஸ்.சி., பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மாலிகுலர் பயோலஜி ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம்  / Life Science பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விலங்கியல் செல் அறிவியல், மாலிகுலர் லேப் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் இருந்தால் நல்லது. 

வயது வரம்பு: 

இந்தப்  பணிகளுக்கு வயது வரம்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஊதிய விவரம்: 

இதற்கு மாத ஊதியமாக ரூ.20ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முலம்  தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அதனை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

The Professor and Head
Department of Animal Biotechnology
Faculty of Basic Sciences
Madras Veterinary College Campus
Chennai - 600 007

இ.மெயில் : hodabtmvc@tanuvas.org.in

இணையதள முகவரி : www.tanuvas.ac.in

நேர்காணல் நடைபெறும் நாள்:  30.08.2023 காலை 10.00 மணி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Embed widget