Chennai Jobs: விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ. 71,900 வரை ஊதியம்: நீதிமன்ற பணிகள்.. விவரம்
Madras High Court Job: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
![Chennai Jobs: விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ. 71,900 வரை ஊதியம்: நீதிமன்ற பணிகள்.. விவரம் Madras High Court Job Driver Direct Recruitment Last date to Apply 13 Feb 2024 Check the details Chennai Jobs: விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ. 71,900 வரை ஊதியம்: நீதிமன்ற பணிகள்.. விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/420935278a259475fd85125d34889b9b1707725847263333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஓட்டுநர்’ பணிக்கு நேரடி தேர்வின் மூலம் தகுதியானவர் தெரிவு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்னப்பிக்க நாளையே (13.02.2024) கடைசி தேதி..
பணி விவரம்
ஓட்டுநர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 18-வயது பூர்த்தி செய்தவராகவும் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 01.07.2024 ம் தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க கூடாது.
- அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள் 01.07.2024 அன்று 42 வயது நிறைவடையாத அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்காலி பணியாளர்கள் அறிவிப்பு தேதி வரை தொடர்ச்சியாகவோ அல்லது தொடர்ச்சியாக அல்லாமலோ அரசுப் பணியில் இருந்த காலத்தை அவர்களுடைய வயதிலிருந்து கழித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.19,500 முதல் ரூ. 71,900 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.500 ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தெரிவு செய்யும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2024
தகுதித் தேர்வின் பாடத்திட்டம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.3%20of%202024%20dt.15.01.2024%20in%20TAMIL.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
செலான் வழியாக இந்தியன் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் - 15.02.2024
’டான்செட்கோ’ வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (Tamil Nadu Generation and Distribution Corporation) உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- டெக்னீசியன் டிப்ளமோ அப்ரசண்டீஸ்
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் - 395
- எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் - 22
- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமென்டேசன் பொறியியல் - 09
- கம்யூட்டர் / தகவல் தொழில்நுட்பம் பொறியியல் - 09
- சிவில் பொறியியல் - 15
மெக்கானிக்கல் பொறியியல் - 50
மொத்த பணியிடங்கள் - 500
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இது ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி ஆகும்.
வயது வரம்பு விவரம்:
Apprenticeship சட்டத்தின்படி வயது வரம்பு விதிகள் பின்பற்றப்படும்.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைகக்ப்படுவர். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 2020,2021, 2022, 20223 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை விவரம்
இதற்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- https://nats.education.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் மாணவர் பதிவு செய்யும் போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.
- அதில் “TANGEDCO” என்றதை தேடி அதில் கிடைக்கும் இன்னொரு இணைப்பை க்ளிக் செய்யவும்.
- பின்னர், அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.02.2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)