Job Alert: டைப்பிங் தேர்ச்சி பெற்றவரா? இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வேலை - முழு விவரம்!
பெரம்பலூர், ராமநாதபுரம்,விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry operator)
கல்வித் தகுதி
12-ம் வகுப்பு தேர்ச்சி . அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணினி பட்டயப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது. ரூ.11,916 மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
99,100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி - 635 115
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.01.2024
https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2022/07/2022071252.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
நாளை வேலைவாய்ப்பு முகாம்
மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரம்பலூர், ராமநாதபுரம்,விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவான கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநிலம் முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர், ராமநாதபுரம்,விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நாளை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
- இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
- இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
- வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.
பெரம்பலூர் வேலைவாய்ப்பு முகாம்
CHRISTAIN MATRIC HIGHER SECCONDARY SCHOOL,
SANTHAM,NAGAR,
ARUMADAL PIRIVU ROAD,
ARIYALUR MAIN ROAD,
PEREAMBALUR.
இராமதநாதபுரம் வேலைவாய்ப்பு முகாம்
பரமக்குடி நகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் வேலைவாய்ப்பு முகாம்
அரசு சட்டக் கல்லூரி,
விழுப்புரம்.
புதிய பேருந்து நிலையம் அருகில்.
புதுக்கோட்டை வேலைவாய்ப்பு முகாம்
செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற 23.12.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்பட்டும்.
கரூர் வேலைவாய்ப்பு முகாம்
தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.