மேலும் அறிய
Advertisement
கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 204 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்
கரூர் தாந்தோணிமலை அரசு கலை கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
கரூர் மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நடைபெறும் தனியார் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் 152 நிறுவனங்கள் மூலம் 5000 பணியிடங்களை உருவாக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வானர்களுக்கு பணி நியமண ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன் அவர்கள் மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) (முகூ.பொ) கோவை கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்முகாமிற்கு 152 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். வேலை வாய்ப்பு முகாமை பொருத்தவரை நிறைய பேர் நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்பீர்கள். அதாவது உங்களுடைய எண்ணம் உச்சபட்ச உயரிய இலக்காக இருக்க வேண்டும். அதற்காக நேரடியாக அந்த இடத்திற்கு போக முடியாது அதனால் படிப்படியாக செல்ல முயற்சிக்க வேண்டும்.
நம்மளுடைய எதிர்பார்ப்பு நிதர்சனத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை கொண்டு நம்முடைய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு படி ஏறிய பின்பு தான் அடுத்த படி ஏற முடியும் அதை மனதில் கொண்டு கிடைக்கும் வாய்ப்பை பற்றி கொண்டு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். சின்ன வேலை சின்ன ஊதியம் இது எனக்கு வேண்டாம் என்ற மனப்பான்மையை நிறுத்த வேண்டும். வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பகுதி நேர வேலைகளாக கிடைத்த வேலைகளை செய்கிறார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ் சமுதாயம் உழைப்பின் அடையாளம் அதை மனதில் கொண்டு கிடைக்கும் வேலையை பயன்படுத்தி நமது முழு ஆற்றலை பயன்படுத்தி முன்னேற அனைவரும் உறுதியாக பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொருத்தரும் செய்யும் கூட்டு பலன் தான் பொருளாதார முன்னேற்றம் என்பதாகும் அதுதான் ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் முன்னேற்றம் ஆகும். நாம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக இருக்க வேண்டும் அதற்காக உழைத்து நாட்டினுடைய வளர்ச்சியும் நம்முடைய வளர்ச்சியும் ஒன்றுதான் என உழைக்க முன்வர வேண்டும் அதேபோல் வேலை அளிப்பவர்களும் பணியில் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுத்து அவர்கள் முன்னேறுவதற்கான வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் எனக்கூறி பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
SBI life insurance, ஜோஸ் ஆலுகாஸ், பி.வி.ஆர் எண்டர் பிரைசஸ் உள்ளிட்ட 152 நிறுவனங்கள் கொண்டு நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 2170 நபர்களில் ஆண்கள் 926 பெண்கள் 1244 கலந்து கொண்டார்கள். அதில் தேர்வான 204 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் ஆண்கள் 301 பெண்கள் 232 மொத்தம் 533 நபர்கள் தேர்வாகியுள்ளனர். அரசுத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion